ஓணம் பண்டிகையையொட்டி சார்லப்பள்ளி, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து கேரளத்திற்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சார்லப்பள்ளி- கோட்டயம்- சார்லப்பள்ளி சிறப்பு ரயில்கள்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சார்லப்பள்ளி- கோட்டயம்- சார்லப்பள்ளி சிறப்பு ரயில்களை (07197/07198) தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 16, 23, 30 ஆகிய தேதிகளில் சார்லப்பள்ளியில் இருந்து கோட்டயத்திற்கும், மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 17, 24, 31 ஆகிய தேதிகளில் கோட்டயத்தில் இருந்து சார்லப்பள்ளிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.