• Latest
  • Trending
  • All
கட்டுப்பாடுகளை மீறினால் எந்த நேரத்திலும் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்! – முதல் அமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை

கட்டுப்பாடுகளை மீறினால் எந்த நேரத்திலும் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்! – முதல் அமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை

June 14, 2021
டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

October 16, 2025
விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

August 29, 2025
வீர வணக்கம் பட விமர்சனம்

வீர வணக்கம் பட விமர்சனம்

August 29, 2025
வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

July 29, 2025
ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

July 28, 2025
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

July 28, 2025
‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

July 28, 2025
வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

July 28, 2025
அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

July 23, 2025
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

July 22, 2025
சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

July 18, 2025
ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

July 16, 2025
    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact
    INDIA  |  US EDITION
    Saturday, June 6, 2026
    Vanakkam India
    • Home
    • தலைப்புச் செய்தி
    • தமிழ் சினிமா
    • நம்ம ஸ்டேட்ல
    • விளையாட்டு
    • வணிகம்
    • விமர்சனம்
    No Result
    View All Result
    Vanakkam India
    No Result
    View All Result
    Home இன்றைய பரபரப்பு

    கட்டுப்பாடுகளை மீறினால் எந்த நேரத்திலும் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்! – முதல் அமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை

    கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் மக்களை எச்சரித்துள்ளார்.

    by The Editor
    June 14, 2021
    in இன்றைய பரபரப்பு, தலைப்புச் செய்தி
    0
    கட்டுப்பாடுகளை மீறினால் எந்த நேரத்திலும் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்! – முதல் அமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை
    518
    SHARES
    1.5k
    VIEWS
    Share on FacebookShare on Twitter

    சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் பேசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் நலன் காக்கும் இந்த அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா என்ற பெருந்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் அதிகபட்சமாக ஒருநாளைக்கு தொற்றால் பாதிக்கப்படுகிற வர்கள் 36 ஆயிரமாக இருந்தனர். இது 50ஆயிரமாக உயரும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துகொண்டு வருகிறது.

    ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக விரைவாக குறைந்து கொண்டே வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் காலியாக இல்லை என்பது மாதிரியான நிலைமை இப்போது இல்லை.

    இதையும் படியுங்கள்…தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலானது- டீக்கடைகள் திறக்கப்பட்டன

    தற்போது கட்டணமில்லா அழைப்புகளுக்கு உதவி கேட்டு வரும் தொலைபேசிகளும் குறைந்துவிட்டது. தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வசதியை உங்களுக்கான இந்த அரசு உருவாக்கித்தருகிறது.

    தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக 2 வார காலத்தில் அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் சங்கிலியை உடனே உடைத்தாக வேண்டும். அதற்காகத்தான் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்தோம்.

    ஊரடங்கு கட்டுப்பாட்டை மக்கள் முழுமையாக கடைபிடித்ததால் தான் இந்த அளவுக்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. எனவே விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொண்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    ஊரடங்கை இன்னும் ஒரு வார காலத்துக்கு நீடித்து அறிவியுங்கள் என்று பொதுமக்களிடம் இருந்தே கோரிக்கைகள் வந்தன. அரசும், மக்களும் ஒரேமாதிரியாக சிந்திப்பது மட்டுமல்ல, மக்களின் எண்ணங்களை தான் அரசு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவை இல்லை.

    அரசு என்னதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை மக்கள் பின்பற்றினால் தான் வெற்றி சாத்தியமாகும். விதிகளை மக்கள் பின்பற்றுவதால் தான் தொற்று பரவல் குறைந்தது. அதேபோன்ற எச்சரிக்கை உணர்வோடு மக்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

    கொரோனா… இன்னும் முற்றுப்புள்ளி வைக்கல!

    கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என்று தான் சொன்னேனே தவிர முழுமையாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று சொல்லவில்லை. மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அரசும் மக்களின் நெருக்கடியை உணர்ந்திருக்கிற காரணத்தால் தான் கொரோனா தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் சில தளர்வுகளை கொடுத்து இருக்கிறோம். சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறோம்.

    இந்த தளர்வுகளுக்கான உண்மையான நோக்கத்தை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும். தளர்வுகள் கொடுத்துவிட்டார்கள் என்று அவசியமில்லாமல் வெளியே நடமாடக்கூடாது. தங்களுக்கு தாங்களே ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    நமக்கு நாமே தான் முதன்மையான பாதுகாப்பு. வணிகர்கள் விதிமுறைகளை பின்பற்றி தங்கள் வணிகத்தை செய்ய வேண்டும்.

    தளர்வுகள் தருவது முக்கியமல்ல. அந்த தளர்வுகளுக்கான விதிமுறைகளை சரியாக பின்பற்றியாக வேண்டும். தேநீர் கடைகளில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். தனி மனித இடைவெளியை கடை பிடித்தாக வேண்டும். முடி திருத்தும் நிலையங்களிலும் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

    பல்வேறு விமர்சனங்கள் வரும் என்ற நிலையிலும் மது பானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டை சீரழித்துவிடக்கூடாது என்பதில் இந்த அரசு கவனமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும்.

    கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்கிறேன்.

    கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும். காவல் துறை கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாடுகளை மதிக்கும் மக்களாக தமிழ் நாட்டு மக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். அந்த விருப்பத்தை நமது மக்கள் நிச்சயமாக நிறைவேற்றுவார்கள் என்கிற நம்பிக்கையும் எனக்கு நிரம்ப இருக்கிறது.

    முழு ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். பொது போக்குவரத்து சேவையை விரைவில் இயக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். இப்படி ஒவ்வொன்றாக செயல்படுத்த வேண்டும் என்றால் அதற்கு மக்கள் துணை அவசியம். தொற்று பரவலை தகர்க்கும் வல்லமை தமிழ் நாட்டு மக்களுக்கு உண்டு. மக்கள் சக்தியே உயர்ந்தது என்பதை விரைவில் நிரூபிப்போம்.”

    இவ்வாறு அவர் பேசினார்.

    Tags: CM MK StalinCoronoLock Downஎச்சரிக்கைகொரோனா ஊரடங்குமுதல்வர் முக ஸ்டாலின்
    Share207Tweet130Share52
    The Editor

    The Editor

    Related Posts

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    by The Editor
    October 16, 2025
    0

    வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்களின்...

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    by The Editor
    August 29, 2025
    0

    RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், கமர்ஷியல்...

    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    by The Editor
    August 29, 2025
    0

    நடிகர்கள்: சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம்குமார், சுரபி லக்ஷ்மி, பிகே மேதினி, ஆதர்ஷ், சிதங்கனா, ஆஷ்விகா இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் ஜேம்ஸ் வசந்தன்,...

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    by The Editor
    July 29, 2025
    0

    இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் சினிமாட்டிக் யுனிவர்சின மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'. இப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர்...

    • Trending
    • Comments
    • Latest
    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    February 5, 2022
    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    June 13, 2022
    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    November 24, 2020
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    0

    The Scary Reason Healthy People Die After an ER Visit

    0

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    0
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    October 16, 2025
    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    August 29, 2025
    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    August 29, 2025
    Vanakkam India

    Copyright © 2009 Vanakkamindia Media

    Navigate Site

    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact

    Follow Us

    No Result
    View All Result
    • Home

    Copyright © 2009 Vanakkamindia Media

    Login to your account below

    Forgotten Password?

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In