Take a fresh look at your lifestyle.

83… உலகக் கோப்பை நாயகர்களின் உண்மைக் கதை!

8

டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி இந்திய அணிக்கு வரலாற்றில் முக்கியமான நாளாகும். உலக்கோப்பை போட்டிகளில் அரையிறுதி கூட நெருங்காத இந்தியா முதன்முறையாக அன்று வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.

பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, இறுதிப் போட்டியில் சந்தித்த கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, அபாராமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக உலகக்கோப்பையையும் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்நிலையில் அதனை கண்முன்னே கொண்டு வரும் ஒரு கலைப்படைப்பாக தான் ‘83’ என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இயக்குநர் கபீர்கான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கபில் தேவாக ரன்வீர் சிங், தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா, மான் சிங் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தவர்கள்போல் நடித்துள்ளனர். 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதையும், கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றையும் அடிப்படையாக வைத்து கதை கரு உருவாக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உலகக் கோப்பையை வென்று இந்திய அணி சரித்திரம் படைத்ததை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள 83 திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.