Take a fresh look at your lifestyle.

டிரம்ப் மகன் தலைக்கு ரூ 95 கோடி.. ஈரான் அதிரடி

அமெரிக்கா அதிபர் டிரம்ப் மகன் பாரன் டிரம்ப்பைக் கொள்பவருக்கு ரூ 95 கோடி பரிசு அறிவித்துள்ளது ஈரான்.

76

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் 20 வயது மகன் பாரன் ட்ரம்பை எங்​கு, எப்​படிக் கொல்​வது என்​பது குறித்த விவரங்​களு​டன் கூடிய ‘வேர் டு கில் பாரன்’ என்ற தலைப்​பிலான வீடியோவை ஈரானிய அரசு ஊடகம் வெளி​யிட்​டுள்​ளது.

மேலும், அவரது தலைக்கு 10 மில்​லியன் டாலர் (ரூ.95 கோடி) பரிசை​யும் அறிவித்துள்​ள​தால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. ஈரானிய தொலைக்​காட்​சி​யின் சேனல் 3-ல் ஒளிபரப்​பான வீடியோ​வில், பாரனின் அன்​றாட நடமாட்​டங்​கள் காண்​பிக்​கப்​பட்​டுள்​ளன. அவர் தீவிரமாகக் கண்​காணிக்​கப்​பட்டு வருவ​தாகக் கூறி​யுள்ள அந்த வீடியோ, அமெரிக்க ரகசி​யப் பாது​காப்​புப் படையை​யும் மீறி ஒரு பெண் பாரனைச் சந்​தித்​த​தாக​வும் தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் ஓயவில்லை. நடுவில் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் சமாதானம் ஏற்படவில்லை. இரு நாடுகளும் பெரும் அழிவை ஏற்படுத்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.