ஏன் என்னை ஏதோ செய்தாய் பட விமர்சனம்
அந்தோணி - மதுமிதா தாஸ் நடித்த ஏன் என்னை ஏதோ செய்தாய் படத்தின் விமர்சனம்.
சிறுவயதிலேயே தாயை இழந்து தந்தையின் அரவணைப்பின்றி தனித்து விடப்படும் அந்தோணி மதுப்பழக்கத்திற்கு அடிமைகிறார். தினமும் ஒரு விலைமாதரை வீட்டுக்கு வரவழைப்பது, அவர்களுடன் பேசி இரவை கழிப்பது என்று அவரது வாழ்க்கை தறி கெட்டு போகிறது. அப்போது ஒரு நாள் இரவு மதுமிதா தோசை அழைத்து வருகிறார். அந்த இரவில் அந்தோணியின் நடவடிக்கைகளைப் பார்த்து அவரிடம் மனதை இழக்கிறார் மதுமிதா தாஸ். இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். அந்தோணியின் வாழ்க்கையில் வசந்தம் வந்துவிடுகிறது ஆனால் அந்த மதுப் பழக்கம் மட்டும் போக மறுக்கிறது. அதன் விளைவு அந்தோணியை பிரிகிறார் மதுமிதா தாஸ்.
மீண்டும் நரக வாழ்க்கையில் தள்ளப்படுகிறார் அந்தோணி. இந்த சோகத்தில் இருந்து அவர் எப்படி மீளுகிறார் மீண்டும் இருவரும் இணைந்தார்களா என்பது நீதிக்கதை.
சற்று வித்தியாசமான கதை, அதே போல அமர்ந்து பார்க்க வைக்க திரைக்கதை, மிகையில்லாத நடிப்பு போன்றவற்றால் படத்தை பார்க்க வைக்கிறார்கள் அந்தோணி மற்றும் மதுமிதா தாஸ்.
படத்தை இயக்கியிருக்கும் அந்தோணிதான் நாயகனாகவும் நடித்திருக்கிறார். மிகை இல்லாத நடிப்பை தந்து இருக்கிறார்.
மதுமிதா தாஸ் இயல்பாக நடித்திருக்கிறார். உடன் நடித்தவர்களும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
ஆனால் பெருமளவு காட்சிகளை வெறும் வசனங்கள் மூலமாக ஒப்பற்ற பார்த்திருப்பது படத்தின் மைனஸ்.
பியேட்ரோ வில்லானி காட்சிகளை இயல்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் ஆகியோரது இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.