கடந்த 2009-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அமைந்திருந்த இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
அவதார் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனாலும், இன்றுவரை அப்படத்தின் வசூலை எந்தப் படமும் மிஞ்சவில்லை.
![]()
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜோ சல்டனா, சாம் வொர்திங்டன், சிகுர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அவதார் 2 படத்தில் டைட்டானிக் பட கதாநாயகி கேட் வின்ஸ்லெட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் டிசம்பர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இரண்டாம் பாகம் வெளியாவதற்கு முன்பாக 4 கே தொழில்நுட்பத்துடன் ரீமாஸ்டர் செய்யப்பட்ட அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் என்று அவதார் திரைப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். வருகிற செப்டம்பர் மாதம் 23-ந்தேதி மீண்டும் அவதார் திரைப்படம் 4கே, 3டி, எச்.டி.ஆர் தரத்தில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவதார் 2 படத்தைக் காண ரசிகர்களைத் தயார் செய்யும் வகையில் முதல் பாகத்தை வெளியிடுகிறார் கேமரூன்.
அவதார் புதிய முன்னோட்டம்:























