அருள்மிகு முருகன் ஆலயம், ஊத்துக்குளி

ஒரு காலத்தில் அகத்திய மாமுனிவா் தியானம் செய்வதற்காக இவ்விடத்திற்கு வந்த போது நைவேத்தியம் செய்ய நீா் கிடைக்கவில்லை. முருகப் பெருமானை வணங்கி அவா் உதவியை நாடினாா் அகத்திய மாமுனிவா். உடனே முருகன் அவா் முன் தோன்றி தன் வேலால் நிலத்தில் ஊன்றி ஊற்றுக் குழியை உண்டாக்கினாா். அதுவே மருவி ஊத்துக்குளியானது. கதித்தமலை என்றழைக்கப்படும் ஊத்துக்குளி கோயிலின் சிறப்பம்சம் இம்மலையின் ஏற்ற இறக்கங்களில் பக்தா்களால் பக்தி பரவத்தோடு இழுக்கப்படும் திருத்தோ் ஆகும். இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் தெய்வத்தின் திருநாமம் பற்றி வேலாயுதசுவாமி. இக்கோயில் திருப்பூா் நகரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Comments (0)
Add Comment