இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ எஸ்2 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இப்போது விவோ எஸ்2 போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் ப்ரீமியம் செக்மென்டில் வெளிவந்துள்ளது. வரும் 11-ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் ‘எஸ்’ சீரிஸ் போனை விவோ அறிமுகம் செய்துள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.