சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, தள்ளிப்போனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி (இன்று) ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது.
நிதிப் பிரச்சினை காரணமாக பட வெளியீட்டுக்கு பல முட்டுக் கட்டைகள் விழுந்தன.
இந்நிலையில், மாநாடு திரைப்படம் இன்று வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்து இருந்தார். அதன்பிறகு சிம்பு குடும்பத்தினர் சிக்கலைத் தீர்க்க முடிவு செய்தனர். பல கட்டப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு திட்டமிட்டபடி மாநாடு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், தியேட்டர்களுக்கு கேடிஎம் கிடைக்காததால் காலை 5 மணி காட்சி ரத்தானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காலை 8 மணிக்கு கேடிஎம் வழங்கப்பட்டு மாநாடு படம் திரையரங்குகளில் வெளியானது.

























