bangle benefits பெண்கள் எந்த வகை வளையல் அணிந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
பெண்கள் வளையல் அணிவது என்பது ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் மிக முக்கியமான பாரம்பரிய வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. அதிலும் திருமணமான பெண்கள் கண்டிப்பாக வளையல் அணியாமல் இருக்கக் கூடாது என சொல்லப்படுவது உண்டு. பெண்கள் அணியும் வளையல்களின் நிறங்கள், எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து அவற்றின் பலன்கள் மாறுபடும் என சொல்லப்படுகிறது. அதே போல் எந்த வகையான உலோகத்தால் செய்யப்பட்ட வளையல்களை அணிந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் தங்களின் கைகளில் கண்டிப்பாக வளையல் அணிய வேண்டும். வளையல் அணியாமல் இருக்கக் கூடாது என நமது முன்னோர்கள் சொல்வது உண்டு. வளையல் என்பது வெறும் அலங்காரத்திற்காக அணிவது என்றும், இது பழங்கால வழக்க முறைகள் என இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலான பெண்கள் வளையல் அணிவதை தவிர்ப்பதுண்டு. ஆனால் பெண்கள் வளையல் அணிவதற்கு பின்னால் ஒரு முக்கியமான அறிவியல் காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அறிவியல் காரணம் பற்றியும், ஆன்மீகத்தில் பெண்கள் வளையல் அணிவதன் சிறப்பு பற்றியும், எந்த பொருளால் செய்யப்பட்ட வளையல்களை அணிந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.