சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தரைக்காற்று சில நேரங்களில் மணிக்கு 20-25 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 30 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்,’ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மாலை முதல் குளிர் அதிகரித்துள்ளது. அவ்வப்போது லேசான மழையுடன் அதிக அளவிலான குளிர் நிலவி வருகிறது. இதனால், சென்னை முழுவதும் மாலை முதல் ஊட்டி போல் குளுகுளுவென குளிர்ந்த நிலையில் உள்ளது.
சென்னையில் குளிர் அதிகரித்துள்ளதால் டுவிட்டர் உள்பட சமூகவலைதளத்தில் ‘ChennaiSnow’ என்ற கீச்சு தீப்பரவலாகி வருகிறது.

























