பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ராப்பகலாக நடந்து வருகிறது..
இந்நிலையில் படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் என்ற அறிவிப்புக்கு படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் போஸ்டரில் தேதி மட்டும் இருப்பதால் நேரம் நள்ளிரவு தான் என ரசிகர்களே தீர்மானிக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர், ஸ்ருதி ஹாசன், அமீர் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் மோனிகா என்ற பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார். இவருக்கு படத்திலும் ஏதாவது கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைத்து உள்ளனர்.

படத்தில் இருந்து இதுவரை மொத்தம் மூன்று பாடல்கள், வெளியாகியுள்ளன. மூன்று ல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், மோனிகா பாடல் உலக அளவில் ட்ரெண்டிங்
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த விழா வெறும் இசை வெளியீட்டு விழா மட்டுமல்ல, அதற்கும் அப்பால் என சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. இந்த விழாவிலேயே படத்தின் ட்ரைலரும் வெளியாகிறது.
திரையுலகில் ரஜினியின் ஐம்பதாவது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்த விழா அமையும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

























