நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளிவந்துள்ள இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
செல்வராகவன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். தனுஷ், யோகி பாபு, பிரபு, இந்துஜா ஆகியோருடன் வெளிநாட்டு நடிகை எல்லி இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த மாத இறுதியில் இந்த படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அண்மையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற மெகா ஹிட் படங்களை தொடர்ந்து தனுஷ், செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது. இதற்கு முன்னர் வெளியான படங்களில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ரகம். அதனால் இந்த கூட்டணிக்கு நானே வருவேன் படத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது ‘வீரா சூரா’ என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை செல்வராகவன் எழுதி உள்ளார். யுவன் மற்றும் முத்து சிற்பி ஆகியோர் பாடியுள்ளனர்.
பாடல் வெளியீட்டையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தப் பாடல் தற்போது இணையப் போக்கில் நான்காவது இடத்தில் உள்ளதோடு, 5 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.
வீரா சூரா பாடல்

























