ஹிட் லிஸ்ட் படத்தின் முன்னோட்டம் மட்டும் இரண்டு பாடல் வரிக் காணொளிகள் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டன.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, பொன்ராம், மித்ரன் ஆர் ஜவஹர், கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை’சிவா, பேரரசு, கதிர், சரண், எழில், இராஜகுமாரன், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின், R.V.உதயகுமார், பி.வாசு, இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கே. பாக்யராஜ், சந்தான பாரதி, ஆர்.பார்த்திபன், ரமேஷ் கண்ணா, நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ஜெயம் ரவி, நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, டி சிவா, ஜெயபிரகாஷ், சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முதலில் படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ்.ரவிக்குமாரின் வேண்டுகோளுக்கிணங்க படத்தின் இரண்டு இயக்குநர்களில் ஒருவரான சூர்யகதிரை இயக்குநர் கே பாக்யராஜ் அறிமுகம் செய்து வைத்தார். இன்னொரு இயக்குனர் கார்த்திகேயனை இயக்குனர் பி வாசு அறிமுகம் செய்து வைத்தார். படத்தின் கதாநாயகனான விஜய் கனிஷ்காவை நடிகர் ஜெயம் ரவி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் படக்குழுவினர் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

நிகழ்ச்சியிலவ் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பேசுகையில், “இந்த திரைப்படம் உருவாவதற்கு காரணமான ரமேஷ் கிராண்ட் கிரியேஷன்ஸ் கார்த்திக், கமலக்கண்ணன், சீனிவாசன், விஜயகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து மரியாதை செய்கிறேன். எதார்த்தமாக வீட்டில் பேசும்போது விஜய் கனிஷ்கா கதாநாயகனாக நடிக்க விரும்புகிறார், நீங்களே உங்கள் தயாரிப்பில் அறிமுகம் செய்து வையுங்கள் என்று விக்ரமன் அவர்கள் கூறியது இன்று உண்மையாகியுள்ளது.
முதலாவதாக சரத்குமார் அவர்களுக்கு, என் மீதும் இயக்குநர் விக்ரமன் சார் மீதும் அன்பு பாராட்டி, இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கதைக்காகவும் கதாபாத்திரத்துகாகவும் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் நடித்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட சித்தாரா அவர்களுக்கும் மிக்க நன்றி. துணைக் கதாப்பத்திரங்களில் நடித்த அனைவருக்கும் மிக்க நன்றி. என்னதான் என்னுடைய உதவி இயக்குனர்களையே இந்த திரைப்படத்தின் இயக்குனர்களாக பணிபுரிய வைத்தாலும் அவர்கள் திரைக்கதையை சிறப்பாக உருவாக்கினார்கள். அதேபோல் அவர்கள் எப்படி பணிபுரிகிறார்கள் என்று சரத்குமார் மற்றும் கௌதம் இருவரிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்,” என்றார்.
தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ் தாணு பேசுகையில், “இயக்குநர் விக்ரமன் அவர்கள் இயக்கிய திரைப்படங்களும் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய திரைப்படங்களும் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வருவாய் ஈட்டி தந்தன. நீங்கள் இருவரும் செய்த சாதனைகளின் பலன் விஜய் கனிஷ்காவுக்கும் வந்து சேரும் என்று நான் வாழ்த்துகிறேன்”, என்றார்.
நடிகர் ‘ஜெயம்’ரவி:
நடிகர் ‘ஜெயம்’ரவி பேசும் பொழுது, “இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் விக்ரமன் அவர்களின் அன்பிற்காகத்தான் இங்கே இவ்வளவு இயக்குனர்கள் வந்துள்ளார்கள். இருவருமே இந்திய சினிமாவின் சிறந்த ஆளுமைகள். அவர்களின் பெயரைக் காப்பாற்றி இந்திய சினிமாவில் ஒருவராக விஜய் கனிஷ்கா வருவார் என்று நான் நம்புகிறேன். நான் அறிமுகம் ஆகும்போது எப்படி ஒரு ஆதரவு எனக்கு கிடைத்ததோ, அதேபோல உங்களுக்கும் கிடைத்துள்ளது. அதேபோல உங்களை நான் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. இரட்டை இயக்குநர்களாக இருப்பதற்கு அவர்களையும் வாழ்த்துகிறேன். வெற்றிப்படம் என்பது இப்போதே தெரிகிறது”, என்றார்.
இயக்குநர் கே பாக்யராஜ்:
“இது ஒரு இசை வெளியீட்டு விழாவாக அல்லாமல் நன்றி தெரிவிக்கும் விழா போல் உள்ளது.சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்பி சௌத்ரி அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். இந்த மாதிரியான இயக்குநர்களை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவுக்கு சேவை செய்துள்ளார். திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. விஜய் கனிஷ்காவிற்கும் திரைப்படம் வெற்றியடையவும் வாழ்த்துகிறேன்”.
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி:
“இந்த மேடையே ஒரு பாசிட்டிவான மேடையாக இருந்தது. கேபாக்யராஜ் அவர்கள், பார்த்திபன், விக்ரமன், கேஎஸ் ரவிக்குமார் ஆகியோரைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. இயக்குநர்கள் விக்ரமன், கேஎஸ் ரவிக்குமார் இருவருமே தயாரிப்பாளர்களின் இயக்குநர்கள் எனப் பெயரெடுத்தவர்கள். இந்தப் படத்தில் அவர்கள் இணைந்திருப்பது நட்பு ரீதியானது. விஜய் கனிஷ்கா அவர்களின் நடிப்பு சிறப்பாக உள்ளது. அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இந்த படம் வெற்றியடைய பத்திரிக்கை நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறேன்”.

இயக்குநர் விக்ரமன்:
“நான் பேச வேண்டியதைந கேஎஸ் ரவிக்குமார் அவர்களே பேசிவிட்டார். இந்த திரைப்படத்தைத் தயாரித்ததற்கு அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அப்பாவாக அல்லாமல், ஒரு இயக்குநராகச் சொல்கிறேன்; விஜய் கனிஷ்கா சிறப்பாக நடித்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். அவர் மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”..

























