Take a fresh look at your lifestyle.

இம்மார்டல்” படத்தின் வெற்றி விழா

ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகி திரையில் ஓடிக் கொண்டிருக்கும் இம்மார்டல் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது.

62

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்களைக் குவித்து, பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன் முதலானவர்களுக்கு தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் உயர்தர கைக்கடிகாரம் ஒன்றை பரிசளித்தார் மேலும் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் ஒன்றையும் பரிசளித்து அசத்தினார்.


விழாவில் படத்தின் வெற்றி, ரசிகர்களின் வரவேற்பு மற்றும் படக்குழுவினரின் அனுபவங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்காக ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், எடிட்டர் ராஜேஷ், சக்தி பிலிம் factory சக்திவேலன், நடிகர் கார்த்தி,
நடிகர் குமார் நடராஜன், நடிகை மிருதுளா, இசையைப்பாளர் சாம் சி எஸ், உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

படத்தின் இயக்குநர் மாரியப்பன் சின்னா மற்றும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வீ பிரகாஷ் ஆகியோரும் நன்றி தெரிவித்துப் பேசினார்.