ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
கமல் ஹாசன் முதாய் வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் முன்னோட்ட படம் அண்மையில் சென்னையில் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் படத்தின் புரொமோஷன் வேலைகளையும் தொடங்கி விட்டது இந்தியன் 2 படக்குழு. இந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசன் பங்கேற்று, படத்தில் பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
படம் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம், அடுத்த பாகமான இந்தியன் 3 பற்றியெல்லாம் இயக்குநர் ஷங்கர் பேசினார்.
மும்பையில்….
அன்று மாலையே இந்தியன்2 படக்குழு மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, படத்தின் இந்தி வடிவமான இந்துஸ்தானி 2 – வின் முன்னோட்டத்தை வெளியிட்டு படம் குறித்து விரிவாகப் பேசினர். இந்த நிகழ்விலும் கமல் ஹாசன் பங்கேற்றார்
மலேசியாவில்…
இந்த நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக அடுத்து மலேசியாவுக்குப் புறப்பட்டுள்ளார் கமல், ஷங்கர் உள்ளிட்ட இந்தியன் 2 படக்குழு.
இந்தியன் 2 படத்தை உலகம் முழுவதும் வரும் ஜூலை 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது லைகா நிறுவனம்.
கல்கி 2898கிபியுடன்…
இந்தியன் 2 பட புரொமோஷனின் அடுத்த கட்டமாக படத்தின் டிரைலரை, அண்மையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள கல்கி2898 கிபி படத்தின் ஆரம்பம் மற்றும் இடைவேளை நேரத்தில் திரையிட்டு வருகின்றனர். கல்கி படத்தில் கமல் ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

























