லிஸ்ட் படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார். இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை, திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ஊடகத் துறையினர் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் புது வசந்தம் தொடங்கி புதிய சரித்திரம் படைத்து பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாக காரணாமாயிருந்த இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார்.
பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தனது ஆர்கே செல்லுலாயிட் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இயக்குநர்கள் சூர்யகதிர் – ௌகார்த்திகேயன் இணைந்து இயக்குகிறார்கள்.
இப்படத்தின் பூஜையில் ஆர்பி சௌத்திரி, சத்யஜோதி தியாகராஜன், பிஎல் தேனப்பன், சுரேஷ் காமாட்சி, இயக்குநர் எழில், கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், எஸ் ஏ சந்திரசேகர், மனோபாலா, லிங்குசாமி, ஏ ஆர் முருகதாஸ், சீனு ராமசாமி, வெற்றிமாறன், பிரபு சாலமன், பாண்டியராஜன், ஆர் கண்ணன், சரண், ரமேஷ் கண்ணா, பேரரசு, ராஜகுமாரன், தேவயானி, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் கலந்துகொண்டு, நடிகர் விஜய் கனிஷ்காவை வாழ்த்தியதுடன், படம் வெற்றிபெற படக்குழுவினரை வாழ்த்தினர்.
திரையுலகில் இயக்குநர் விக்ரமனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றி, பின்னர் புரியாத புதிர் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கேஎஸ் ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

























