• Latest
  • Trending
  • All
‘இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியாவை மாற்றிவிட வேண்டாம்!’ – வைகோ

‘இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியாவை மாற்றிவிட வேண்டாம்!’ – வைகோ

April 9, 2022
ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

July 13, 2026
சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

June 18, 2026
சாருகேசி பட விமர்சனம்

சாருகேசி பட விமர்சனம்

June 18, 2026
Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

June 16, 2026
ரஜினியைச் சந்தி8தத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்

ரஜினியைச் சந்தி8தத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்

June 16, 2026
விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி கூட்டணியில் நூறு சாமி

விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி கூட்டணியில் நூறு சாமி

June 16, 2026
டபுள் ஆக்குபன்சி (Double Occupancy) விமர்சனம்

டபுள் ஆக்குபன்சி (Double Occupancy) விமர்சனம்

June 15, 2026
டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

October 16, 2025
விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

August 29, 2025
வீர வணக்கம் பட விமர்சனம்

வீர வணக்கம் பட விமர்சனம்

August 29, 2025
வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

July 29, 2025
ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

July 28, 2025
    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact
    INDIA  |  US EDITION
    Thursday, July 30, 2026
    Vanakkam India
    • Home
    • தலைப்புச் செய்தி
    • தமிழ் சினிமா
    • நம்ம ஸ்டேட்ல
    • விளையாட்டு
    • வணிகம்
    • விமர்சனம்
    No Result
    View All Result
    Vanakkam India
    No Result
    View All Result
    Home தலைப்புச் செய்தி

    ‘இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியாவை மாற்றிவிட வேண்டாம்!’ – வைகோ

    இந்திதான் இந்தியா என்ற அமித் ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டை தகர்த்துவிடும்... இந்தியாவை இன்னொரு சோவியத் யூனியனாக்கிவிடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

    by The Editor
    April 9, 2022
    in தலைப்புச் செய்தி, நம்ம ஸ்டேட்ல
    0
    ‘இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியாவை மாற்றிவிட வேண்டாம்!’ – வைகோ
    522
    SHARES
    1.5k
    VIEWS
    Share on FacebookShare on Twitter

    சென்னை: இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை திணித்தே தீர வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டணம் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    “டெல்லியில் ஏப்ரல் -8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். பல மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்து இருக்கிறார்.

    உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியால்தான் இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்று கூறி இருக்கிற கருத்து கடும் கண்டனத்துக்கு உரியது.

    மேலும், “9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தித் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
    மத்திய அமைச்சரவையின் 70 விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தியில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.
    நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை நிச்சயமாக இது அதிகரிக்கச் செய்யும்” என்று அமித்ஷா கருத்துத் தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழித் திணிப்பை தீவிரப்படுத்த முனைந்து இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

    2014 மே மாதம் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்றத்திலிருந்து இந்தியைத் திணிப்பதற்கான அரசு ஆணைகளை அவ்வப்போது பிறப்பித்து வருகிறது.

    ஒன்றிய அரசின் அதிகாரிகள் தமது அதிகாரப்பூர்வ வலைதளங்களில், இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    ஒன்றிய அரசின் கோப்புகள் இந்தி மொழியில் தயாரிக்க வேண்டும்.

    பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலர்கள் இந்தியில்தான் கையெழுத்திட வேண்டும்.

    வங்கித் தேர்வுகள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே நடைபெற வேண்டும்.

    இந்தி மொழியை தொலைக்காட்சிகள் அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்த வேண்டும்.

    தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் நாடகம், திரைப்படம் ஆகியவற்றில் இடம் பெறும் காட்சிகளின் உரையாடல்கள் இந்தி மொழியில் வாக்கியங்களாக (Sub-title) திரையில் இடம்பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தேசிய கல்விக் கொள்கை -2020 இல் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்ற பரிந்துரை,

    இதன் உச்சமாக 2019, செப்டம்பர் 14 இல் டெல்லியில் நடந்த இந்தி நாள் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவாக ஒரு மொழி நிச்சயம் தேவை. அதுதான் பன்னாட்டு அளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். அப்படி இந்தியாவை இணைக்க இந்தி மொழியால்தான் முடியும். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்தி மொழி மிகப்பெரிய உச்சத்தை அடைந்துவிடும்,” என்று இந்தித் திமிரோடு பேசினார். அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
    தற்போதும் அதைப்போல மீண்டும் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டத்திலும் வலியுறுத்தி இருக்கிறார்.

    இந்தி மொழியால் இந்தியாவை இணைக்க முடியாது. இந்திதான் இந்நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றுமை உணர்வை சிதைத்துவிடும் என்பதை பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் உணரவில்லை.

    இந்தித் திணிப்புக்கு எதிராக 1938 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் மொழி உரிமைக்காகப் போராடியதை மறந்துவிட வேண்டாம்.

    1965 இல் தமிழ் நாட்டில் நடைபெற்ற நான்காவது இந்தி எதிர்ப்புப் போராட்டம், நாட்டையே உலுக்கியதை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு நினைவுபடுத்துகிறேன்.

    இந்தியாவின் பன்மொழி, பண்பாடு, மரபு உரிமைகள், தேசிய இனங்களின் தனித்துவமான அடையாளங்கள் சிதைக்கப்பட்டால், ஒருமைப்பாடு உடைந்து நொறுங்கி, இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியா மாறிவிடும். அதற்கு பா.ஜ.க. அரசு வழி வகுத்துவிடக் கூடாது என்று எச்சரிக்கிறேன்.”

    Tags: Amit shahHindiVaikoஅமித் ஷாஇந்தித் திணிப்புவைகோ
    Share209Tweet131Share52
    The Editor

    The Editor

    Related Posts

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    by The Editor
    July 13, 2026
    0

    ஷோயிங் பிசினஸ் (Showing Business) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயா, இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய 'பாகுபலி' படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா...

    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    by The Editor
    June 18, 2026
    0

    பிரபல தயாரிப்பாளரான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள எங்கள் தங்கம் திரைப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ்...

    சாருகேசி பட விமர்சனம்

    சாருகேசி பட விமர்சனம்

    by The Editor
    June 18, 2026
    0

    கர்நாடக இசை மேதை ஒருவரின் வீட்டில் நடக்கும் பிரச்சினைகள், ஏற்படும் சிக்கல்கள் அவற்றிலிருந்து அந்தக் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதை வைத்து பின்னப்பட்ட கதை இந்த சாருகேசி....

    Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

    Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

    by The Editor
    June 16, 2026
    0

    முதலில் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி- அவரது நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு ( Mana Sangara Vara Prasad Garu) திரைப்படத்தின் மூலம்...

    • Trending
    • Comments
    • Latest
    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    February 5, 2022
    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    June 13, 2022
    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    November 24, 2020
    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    0

    The Scary Reason Healthy People Die After an ER Visit

    0

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    0
    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    July 13, 2026
    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    June 18, 2026
    சாருகேசி பட விமர்சனம்

    சாருகேசி பட விமர்சனம்

    June 18, 2026
    Vanakkam India

    Copyright © 2009 Vanakkamindia Media

    Navigate Site

    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact

    Follow Us

    No Result
    View All Result
    • Home

    Copyright © 2009 Vanakkamindia Media

    Login to your account below

    Forgotten Password?

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In