• Latest
  • Trending
  • All
‘இன்னும் என்னென்ன துரோகங்களைச் செய்யப் போகிறதோ அதிமுக அரசு!’ – முக ஸ்டாலின்

‘இன்னும் என்னென்ன துரோகங்களைச் செய்யப் போகிறதோ அதிமுக அரசு!’ – முக ஸ்டாலின்

October 14, 2020
ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

July 13, 2026
சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

June 18, 2026
சாருகேசி பட விமர்சனம்

சாருகேசி பட விமர்சனம்

June 18, 2026
Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

June 16, 2026
ரஜினியைச் சந்தி8தத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்

ரஜினியைச் சந்தி8தத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்

June 16, 2026
விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி கூட்டணியில் நூறு சாமி

விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி கூட்டணியில் நூறு சாமி

June 16, 2026
டபுள் ஆக்குபன்சி (Double Occupancy) விமர்சனம்

டபுள் ஆக்குபன்சி (Double Occupancy) விமர்சனம்

June 15, 2026
டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

October 16, 2025
விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

August 29, 2025
வீர வணக்கம் பட விமர்சனம்

வீர வணக்கம் பட விமர்சனம்

August 29, 2025
வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

July 29, 2025
ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

July 28, 2025
    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact
    INDIA  |  US EDITION
    Thursday, July 30, 2026
    Vanakkam India
    • Home
    • தலைப்புச் செய்தி
    • தமிழ் சினிமா
    • நம்ம ஸ்டேட்ல
    • விளையாட்டு
    • வணிகம்
    • விமர்சனம்
    No Result
    View All Result
    Vanakkam India
    No Result
    View All Result
    Home தலைப்புச் செய்தி

    ‘இன்னும் என்னென்ன துரோகங்களைச் செய்யப் போகிறதோ அதிமுக அரசு!’ – முக ஸ்டாலின்

    by The Editor
    October 14, 2020
    in தலைப்புச் செய்தி, நம்ம ஸ்டேட்ல
    0
    ‘இன்னும் என்னென்ன துரோகங்களைச் செய்யப் போகிறதோ அதிமுக அரசு!’ – முக ஸ்டாலின்
    494
    SHARES
    1.4k
    VIEWS
    Share on FacebookShare on Twitter

    சென்னை: பதவிக்காக – ஊழலுக்காக, ‘நீட் தேர்வில்’ தமிழகக் கல்வி உரிமையைப் பறி கொடுத்தது போல், இப்போது மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது அதிமுக அரசு என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

    இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

    அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்களில், தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில (அதிமுக) அரசு, கமிட்டிக் கூட்டத்தில் முன் வைக்கவில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது’ என்று வெளிவந்துள்ள அதிர்ச்சியான செய்தி, இடஒதுக்கீட்டுக் கொள்கையில் அதிமுக அரசின் இரட்டை வேடத்தை – மத்திய பாஜக அரசுடன் ‘கூட்டணி’ வைத்து நடத்தும் கபட நாடகத்தை மீண்டும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

    உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் திமுக சார்பில் வாதாடியதன் தொடர்ச்சியாக, ‘மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டு உரிமை தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உண்டு’ என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 27 ஆம் தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது.

    அத்தீர்ப்பின் அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் பற்றி ஆராய ஒரு குழு அமைத்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. தீர்ப்பு வெளிவந்தவுடன் வரவேற்று அறிக்கை விடுத்த நான், ‘அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்களில், இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்’ என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தினேன்.

    உடனே அதிமுக அரசும், ‘இந்த ஆண்டே இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்’ என்று கூறி – ‘அடுத்த ஆண்டு முதல் இடஒதுக்கீடு வழங்கலாம்’ என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இந்நிலையில் மத்திய அரசு – மாநில அரசு – இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது. நேற்றைய தினம் (13.10.2020), இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்த போது, ‘22.9.2020 அன்று கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக அரசின் பிரதிநிதி முன் வைக்கவில்லை.

    அடுத்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது’ என்றும்; ‘பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவரின் இடஒதுக்கீடு சதவீதங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் மாநில அரசிடம் கேட்ட சில விவரங்களை இன்னும் தமிழக அரசு தராததால் அதில் முடிவு எடுக்க இயலவில்லை’ என்றும் கூறியிருக்கிறது மத்திய அரசு.

    உடனே திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டினை முடிவு செய்யும் வரை- அந்தத் தீர்ப்பிற்குப் பாதகமின்றி- ஏற்கனவே நடைமுறையில் உள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்த ஆண்டே மருத்துவக் கல்வி இடங்களில் வழங்கிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    இதனடிப்படையில் ‘அதற்கான வழிமுறைகளைப் பெறுமாறு’ மத்திய அரசு வழக்கறிஞரை உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் அறிவுறுத்தியிருக்கிறது. மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டைப் பெறுவதில் அதிமுக அரசின் இரட்டை வேடமும், செயல்பாடும் மிகவும் கவலையளிக்கிறது..

    ‘இந்த ஆண்டே இடஒதுக்கீடு வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து உச்சநீதிமன்றத்திற்குப் போன அதிமுக அரசு – குட்கா வழக்கிற்குப் பயந்தோ அல்லது நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கிற்கு அஞ்சியோ – அதற்கான மத்திய அரசின் கமிட்டிக் கூட்டத்தில் இந்த இடஒதுக்கீடு துரோகத்தைத் தமிழகத்தில் மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்குச் செய்திருக்கிறது.

    பதவிக்காக – ஊழலுக்காக, ‘நீட் தேர்வில்’ தமிழகக் கல்வி உரிமையைப் பறி கொடுத்தது போல், இப்போது இந்த இடஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது. ஆட்சியிலிருந்து போவதற்குள் – ஏற்கனவே செய்த துரோகங்கள் போதாது என்று, எஞ்சியிருக்கின்ற மாதங்களில் இன்னும் என்னென்ன துரோகங்களைத் தமிழ்நாட்டிற்கும்- தமிழக மக்களுக்கும் செய்துவிட்டுப் போக அதிமுக அரசு காத்திருக்கிறதோ.

    இந்த ஆண்டே இடஒதுக்கீடு பெற வேண்டும் என்ற முயற்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையைப் போட்டு – பொறுப்பற்ற முறையில் செயல்பட்டிருக்கும் அதிமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனவே, திமுக ஏற்கனவே வலியுறுத்தியது போல், மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே பெறுவதற்கு அதிமுக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் – மாநில இடஒதுக்கீட்டு உரிமையை இழப்பதற்குத் துணை போகாமல் விரைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இருப்பது இன்னும் சில மாதங்கள். அதற்குள், தேர்தலுக்கான கூட்டணி பேரத்தை முன்னிறுத்தி, நம் பதவிக்குக் கடைசி நேர ஆபத்துக்களை ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று நினைத்து முதல்வர் செயல்பட்டால் – அந்த மாபெரும் துரோகத்தைத் தமிழகம் மன்னிக்காது.

    தமிழக இளைஞர்கள் எக்காலத்திலும் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன். பாஜகவுடனான தேர்தல் கூட்டணிக்காக, எடப்பாடி அதிமுக எதையும் விட்டுக் கொடுக்கவும், பலி பீடம் ஏற்றவும் தயாராக இருக்கிறது என்பதைத் தமிழக மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்”.

    -இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    Tags: ADMK GovtMedical seatsmk stalinOBCsReservationஅதிமுக அரசுஇட ஒதுக்கீடுமருத்துவக் கல்விமுக ஸ்டாலின்
    Share198Tweet124Share49
    The Editor

    The Editor

    Related Posts

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    by The Editor
    July 13, 2026
    0

    ஷோயிங் பிசினஸ் (Showing Business) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயா, இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய 'பாகுபலி' படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா...

    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    by The Editor
    June 18, 2026
    0

    பிரபல தயாரிப்பாளரான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள எங்கள் தங்கம் திரைப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ்...

    சாருகேசி பட விமர்சனம்

    சாருகேசி பட விமர்சனம்

    by The Editor
    June 18, 2026
    0

    கர்நாடக இசை மேதை ஒருவரின் வீட்டில் நடக்கும் பிரச்சினைகள், ஏற்படும் சிக்கல்கள் அவற்றிலிருந்து அந்தக் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதை வைத்து பின்னப்பட்ட கதை இந்த சாருகேசி....

    Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

    Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

    by The Editor
    June 16, 2026
    0

    முதலில் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி- அவரது நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு ( Mana Sangara Vara Prasad Garu) திரைப்படத்தின் மூலம்...

    • Trending
    • Comments
    • Latest
    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    February 5, 2022
    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    June 13, 2022
    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    November 24, 2020
    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    0

    The Scary Reason Healthy People Die After an ER Visit

    0

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    0
    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    July 13, 2026
    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    June 18, 2026
    சாருகேசி பட விமர்சனம்

    சாருகேசி பட விமர்சனம்

    June 18, 2026
    Vanakkam India

    Copyright © 2009 Vanakkamindia Media

    Navigate Site

    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact

    Follow Us

    No Result
    View All Result
    • Home

    Copyright © 2009 Vanakkamindia Media

    Login to your account below

    Forgotten Password?

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In