அடுத்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் 3 படங்கள் வெளியாகவிருக்கின்றன. ஒருகாலத்தில் தொடர்ந்து வெள்ளி விழாப் படங்களையும், உலக அளவில் பெரும் வெற்றிப் பெற்ற படங்களையும் கொடுத்து வந்த ஷாருக்கான், சமீப ஆண்டுகளில் பெரிய வெற்றிப் படம் எதையும் தரவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு சோர்வை அளித்திருந்த நிலையில், முதலில் பதான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது.
இந்தப் படத்தை ஆதித்ய சோப்ரா இயக்கி வருகிறார். சமீபத்தில் பெரும் வெற்றிப் பெற்ற வார் படத்துக்குப் பிறகு, ஆதித்ய சோப்ரா இயக்கும் படம் இது. பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக பதான் உருவாகிறது. இந்த படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.

மேலும் படத்தில் ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த நிலையில், பதான் படத்தின் முதல் தோற்றம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பதான் திரைப்படம் திரைக்கு வரும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
முன்னதாக ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கும் ஜவான் படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு அறிவிப்பு வீடியோ வெளியாகி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் டுங்கி என்ற படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு சீரான இடைவெளியில் 3 படங்கள் ஷாருக்கானுக்கு வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
See you next year on 25th Jan, 2023. Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you on 25th January, 2023. Releasing in Hindi, Tamil and Telugu. @deepikapadukone | @TheJohnAbraham | #SiddharthAnand | @yrf pic.twitter.com/MUN3XFq5u3
— Shah Rukh Khan (@iamsrk) June 25, 2022

























