• Latest
  • Trending
  • All
தமிழக விளையாட்டுக் கழகம்!

தமிழக விளையாட்டுக் கழகம்!

February 4, 2024
டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

October 16, 2025
விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

August 29, 2025
வீர வணக்கம் பட விமர்சனம்

வீர வணக்கம் பட விமர்சனம்

August 29, 2025
வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

July 29, 2025
ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

July 28, 2025
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

July 28, 2025
‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

July 28, 2025
வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

July 28, 2025
அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

July 23, 2025
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

July 22, 2025
சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

July 18, 2025
ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

July 16, 2025
    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact
    INDIA  |  US EDITION
    Saturday, June 6, 2026
    Vanakkam India
    • Home
    • தலைப்புச் செய்தி
    • தமிழ் சினிமா
    • நம்ம ஸ்டேட்ல
    • விளையாட்டு
    • வணிகம்
    • விமர்சனம்
    No Result
    View All Result
    Vanakkam India
    No Result
    View All Result
    Home சிறப்புக் கட்டுரை

    தமிழக விளையாட்டுக் கழகம்!

    நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் குறித்த சுப வீரபாண்டியன் கட்டுரை.

    by The Editor
    February 4, 2024
    in சிறப்புக் கட்டுரை, தலைப்புச் செய்தி
    0
    தமிழக விளையாட்டுக் கழகம்!
    498
    SHARES
    1.4k
    VIEWS
    Share on FacebookShare on Twitter

     

    நடிகர் விஜய், தான் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சிக்கு, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பெயரிட்டு, அதனை இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்னும் நிலையில், பொது வாழ்வில் அக்கறை கொண்டு அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் விஜய் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்!

    ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் வள்ளுவர் வாக்கை முன்னிறுத்தி இருப்பது நமக்கு மகிழ்ச்சி தருகிறது!

    அவர் விடுத்துள்ள அறிக்கையை ஊன்றிப் படித்த போது, சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. “இன்றைய அரசியலில், நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை, சாதி, மத பேதங்கள் வாயிலாகப் பிளவுபடுத்தத் துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் மறுபுறம் ” என்கிறது அந்த அறிக்கை! இவற்றையெல்லாம் சரி செய்வதற்காகத்தான் அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் விஜய் கூறுகிறார். படிப்பதற்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது!

    இப்படித்தான் 2019 ஆம் ஆண்டு, திரைப்படத் துறையில் இருக்கும் ஒரு பெரிய ஆளுமையிடமிருந்து அறிக்கை வந்தது. சிஸ்டமே கெட்டுக் கிடக்கிறது என்றும், அதைச் சரி செய்வதற்காகவே அரசியலுக்கு வருவதாகவும் அன்றைய அறிக்கை கூறியது. பிறகு 2020 ஆம் ஆண்டு இறுதியில், தான் அரசியலுக்குள் வரப் போவதில்லை என்று அவர் தெரிவித்து விட்டார்.

    யார் ஒருவரும் அரசியலுக்கு வரக்கூடாது என்றோ, வந்தே தீர வேண்டும் என்றோ நாம் கூற முடியாது. அது அவரவர் விருப்பம், உரிமை! ஆனாலும் நடிகர் விஜய் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கையை முன் வைக்க வேண்டி இருக்கிறது.

    விஜய் அவர்களே, உங்கள் அறிக்கையைப் பார்த்தவுடன் பூங்கொத்தோடு பலர் புறப்பட்டு வந்து விடுவார்கள். ஒருவர் சொல்வார் – காந்தியாருக்குப் பிறகு நீங்கள் அழைத்தவுடன்தான் யோக்கியர்கள் எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே நான் உங்கள் கட்சிக்கு வந்து விட்டேன் என்பார். பிறகு சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் அவருக்கு இடம் கொடுக்கவில்லை என்றாலும், அல்லது அவரால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றாலோ, உடனே ஊழலை ஒழிக்க மறுபடியும் வெளியில் போய்விடுவார்!

    இரண்டு திராவிடக் கட்சிகளையும் வேரறுப்பதே என் வாழ்நாள் இலக்கு என்னும் “மிக உயர்ந்த நோக்கத்தோடு ” இன்னொருவர் உங்களை ஆதரிப்பார். நடிகர் விஜய் அவர்களை முதல்வராக்கும் வரையில் நான் ஓய மாட்டேன் என்று சூளுரை விடுப்பார். பிறகு நீங்கள் கட்சி தொடங்குவது பற்றி மறு சிந்தனைக்கு ஆளானால், முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று எண்ணி வந்தேன், என் கணக்கு தவறாகிவிட்டது என்று சொல்லி, உங்களையும் முள் என்று மறைமுகமாகத் தெரிவித்து விடுவார். அவருடைய அறம் சார்ந்த அரசியல் அப்படிப்பட்டது.

    இவர்களைப் போன்ற பெரிய மனிதர்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதோடு, உங்கள் அரசியல் பயணம் பற்றிய ஒரு வினாவிற்கும் விடை சொல்ல வேண்டும்!

    நாட்டைத் திருத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு அரசியலுக்கு வந்திருப்பதாகச் சொல்லும் நீங்கள் , திரைப்பட வேலைகளை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறுகிறீர்கள். திரைப்படப் பணிதான் முதல் பணி, நாட்டைச் சீர்திருத்துவது பிறகுதான் என்று நீங்கள் கருதி இருக்கக்கூடும்! அதுவரையில் நாடும் உங்களுக்காகக் காத்திருக்க வேண்டும்! இன்னொரு வேண்டுகோளும் இருக்கிறது. நாட்டைத் திருத்துவதற்கு முன்பு, திரைப்படத் துறையிலும் சில சீர்திருத்தங்களைச் செய்து விட்டு வாருங்கள். கருப்புப் பணம் என்பது இனி எங்கும் இருக்கக் கூடாது, உங்கள் படம் உள்பட எந்தப் படத்திற்கான நுழைவுச் சீட்டும் ஒன்றுக்கு பத்தாக விற்பனை செய்யப்படக்கூடாது என்பதையும் உறுதியாகத் தெரிவித்து விடுங்கள்! உங்களின் சீர்திருத்தம் உங்கள் துறையிலிருந்தே முதலில் தொடங்கட்டும்.

    இவற்றில் எல்லாம் விஜய் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்றால், அவர் தொடங்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகம், வெறுமனே தமிழக விளையாட்டுக் கழகமாக முடிந்து விடும்!

    அன்புடன்
    -சுப. வீரபாண்டியன்

    Tags: Suba VeerapandianTVKVijayசுபவீவிஜய் அரசியல்
    Share199Tweet125Share50
    The Editor

    The Editor

    Related Posts

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    by The Editor
    October 16, 2025
    0

    வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்களின்...

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    by The Editor
    August 29, 2025
    0

    RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், கமர்ஷியல்...

    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    by The Editor
    August 29, 2025
    0

    நடிகர்கள்: சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம்குமார், சுரபி லக்ஷ்மி, பிகே மேதினி, ஆதர்ஷ், சிதங்கனா, ஆஷ்விகா இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் ஜேம்ஸ் வசந்தன்,...

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    by The Editor
    July 29, 2025
    0

    இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் சினிமாட்டிக் யுனிவர்சின மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'. இப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர்...

    • Trending
    • Comments
    • Latest
    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    February 5, 2022
    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    June 13, 2022
    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    November 24, 2020
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    0

    The Scary Reason Healthy People Die After an ER Visit

    0

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    0
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    October 16, 2025
    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    August 29, 2025
    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    August 29, 2025
    Vanakkam India

    Copyright © 2009 Vanakkamindia Media

    Navigate Site

    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact

    Follow Us

    No Result
    View All Result
    • Home

    Copyright © 2009 Vanakkamindia Media

    Login to your account below

    Forgotten Password?

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In