Take a fresh look at your lifestyle.

அதிரடி வசூல்… மேக்ஸ் படத்துக்கு பெரும் வரவேற்பு!

7

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிச்சா சுதீப்பின் புதிய படம் MAX. கலைப்புலி தாணு தயாரித்த முதல் கன்னடப் படம் இது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் 27 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இன்று கன்னட மொழியில் வெளியாகி
பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. புதிய இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கிய இந்தப் படத்துக்கு அஜனீஷ் பி. லோக்நாத் இசையமைத்துள்ளார்.

கர்நாடகாவில் மட்டும் முதல் நாளில் ரூ 9.5 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது மேக்ஸ்.

இந்தியா மற்றும் உலகெங்கும் நாளை இப்படம் வெளியாகிறது.