• Latest
  • Trending
  • All
இனம், மொழி என்று இளைஞர்களை ஏமாற்றவில்லை… கொள்கை பேசிக் கொள்ளை அடிக்கவில்லை! – தமிழருவி மணியன்

இனம், மொழி என்று இளைஞர்களை ஏமாற்றவில்லை… கொள்கை பேசிக் கொள்ளை அடிக்கவில்லை! – தமிழருவி மணியன்

January 3, 2021
ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

July 13, 2026
சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

June 18, 2026
சாருகேசி பட விமர்சனம்

சாருகேசி பட விமர்சனம்

June 18, 2026
Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

June 16, 2026
ரஜினியைச் சந்தி8தத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்

ரஜினியைச் சந்தி8தத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்

June 16, 2026
விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி கூட்டணியில் நூறு சாமி

விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி கூட்டணியில் நூறு சாமி

June 16, 2026
டபுள் ஆக்குபன்சி (Double Occupancy) விமர்சனம்

டபுள் ஆக்குபன்சி (Double Occupancy) விமர்சனம்

June 15, 2026
டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

October 16, 2025
விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

August 29, 2025
வீர வணக்கம் பட விமர்சனம்

வீர வணக்கம் பட விமர்சனம்

August 29, 2025
வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

July 29, 2025
ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

July 28, 2025
    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact
    INDIA  |  US EDITION
    Wednesday, July 29, 2026
    Vanakkam India
    • Home
    • தலைப்புச் செய்தி
    • தமிழ் சினிமா
    • நம்ம ஸ்டேட்ல
    • விளையாட்டு
    • வணிகம்
    • விமர்சனம்
    No Result
    View All Result
    Vanakkam India
    No Result
    View All Result
    Home சிறப்புக் கட்டுரை

    இனம், மொழி என்று இளைஞர்களை ஏமாற்றவில்லை… கொள்கை பேசிக் கொள்ளை அடிக்கவில்லை! – தமிழருவி மணியன்

    "...மதத்தைக் காட்டி மக்களைப் பிரிப்பதும், இனம், மொழி என்று இளைஞர்களை ஏமாற்றுவதும், கொள்கை பேசிக் கொள்ளை அடிப்பதும் மட்டுமே அரசியல் பங்களிப்பு என்றால் அதைத் தமிழருவி மணியன் எந்நாளும் செயததில்லை என்பது உண்மைதான்."

    by The Editor
    January 3, 2021
    in சிறப்புக் கட்டுரை, தலைப்புச் செய்தி
    0
    இனம், மொழி என்று இளைஞர்களை ஏமாற்றவில்லை… கொள்கை பேசிக் கொள்ளை அடிக்கவில்லை! – தமிழருவி மணியன்
    497
    SHARES
    1.4k
    VIEWS
    Share on FacebookShare on Twitter

    தமிழருவி மணியன் அரசியலில் ஈடுபட்டு இதுவரை என்ன செய்தார்? என்பது ஒரு வாசகரின் விவரமறியாத விடலைக் கேள்வி. கடந்த கால அரசியல் வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையில்கூடப் பார்க்கத் தெரியாத கழுகார் ‘ இதே கேள்வி அவருக்கும் எழுந்ததாலோ என்னமோ போகிறேன்.. வரமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்’என்று எள்ளல் தன்மையோடு பதில் அளித்திருக்கிறார்.

    ஐம்பதாண்டுகளுக்கு மேல் சில மேலான இலட்சியங்களுக்காக ஒரு முழு வாழ்க்கையையும் வீணாக்கிவிட்டவனின் வலி கழுகறிய வாய்ப்பில்லை. வானத்தில் வட்டமிட்டாலும் கழுகின் பார்வை மண்ணில் கிடக்கும் அழுகிப்போன மாமிசத்தின் மீதுதான் படிந்து கிடக்கும்.

    ஐம்பதாண்டுகளுக்கு மேல் அரசியலில் தமிழருவி மணியன் என்ன செய்தான்?

    கல்லூரிப் பருவத்திலேயே படிப்பில் சிந்தை செலுத்தாமல் இந்தி எதிர்ப்பு வேள்வியில் மிகத் தீவிரமாகக் களமாடியவன் தமிழருவி மணியன். இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தபோது இளம் பருவத்தில் மாநிலம் முழுவதும் ஒற்றை மனிதனாக நெருக்கடி காலக் கொடுமைகளை எதிர்த்து நான்கு சுவர்களுக்கு நடுவில் எந்த அச்சமுமின்றி நாக்கு யாகம் நடத்தியவன் தமிழருவி மணியன்.

    ஜனநாயகம் பெற்றுத் தந்த அடிப்படை உரிமைகள் அனைத்தையும் 42வது சட்ட திருத்தத்தின் மூலம் இந்திராகாந்தி பறித்தெடுத்தபோது அதை எதிர்க்க அனைவரும் தயங்கியநிலையில் , ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’என்று ஆண்மையுடன் கருத்தரங்கத் தலைமையேற்று மிகக் கடுமையாகப் போர்க்குரல் கொடுத்தவன் தமிழருவி மணியன். அப்போது கேள்வி கேட்ட வாசகரும், நையாண்டி செய்த கழுகாரும் பிறந்திருக்க வாய்ப்பில்லை.

    அண்ணாவின் மறைவுக்குப் பின்பு சுயநலத்தில் சுருங்கி, பொதுவாழ்க்கைப் பண்பு நலன்களைப் பாழ்படுத்தி, எவ்வித சமூகக் கூச்சமுமின்றி மக்கள்

    சொத்தைக் கொள்ளை அடிப்பதையே வாழ்வியலாகக் கொண்டு வலம் வரும் இரண்டு திராவிட கட்சிகளின் சுயமுகங்களைத் தொடர்ந்து தோலுரித்துக் காட்டி மக்களை விழிப்படையச் செய்ய முயன்று பார்ப்பதே அரசியலில் ஆக்கபூர்வமான பங்களிப்பு இல்லையா?

    வாழ்வை வளமாக்கிக் கொள்வதற்கு ஒரு நாள் தி.மு.கவிலும் மறுநாள் அ.தி.மு.க. விலும் மாறிமாறிப் பயணிக்காமல் ஐம்பதாண்டுகளுக்கு மேல் சுதர்மத்தையும், சுயாபிமானத்தையும் இழந்துவிடாமல் ஒரு சிறிய வாடகை வீட்டில் வறுமையோடு வாழ்க்கை நடத்துவது மக்கள் நலன் சார்ந்த அரசியல் தவம் இல்லையா?

    உண்மையும் நேர்மையும் ஒழுக்கமும் எள்ளளவும் பழுதுபடாமல் சேற்றில் மலர்ந்தாலும் அந்தச் சேறுபடாமல் தன்னைக் காத்துக்கொள்ளும் தாமரையைப்போல் வாழ்வதே அரசியலில் ஒரு பெருமைக்குரிய சிறப்பில்லையா?

    இலக்கிய மேடைகளில் பேசுவதற்கு வழங்கப்படும் பணத்தைத் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் கல்விக்கும், வறுமையில் வாடும் இளம்பெண்களின் திருமணத்திற்கும் பயன்படுத்துவது ஓர் உயரிய சமூகப் பங்களிப்பில்லையா?

    மதுவிலக்கிற்காக மாநிலம் முழுவதும் என்னுடைய காந்திய மக்கள் இயக்கம் நடத்திய போராட்டங்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள், வருவாய் இழப்பை ஈடு செய்ய முதல்வர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பித்த நிதியாதாரம் பெருக்கும் மாற்றுத் திட்டம் பற்றி ஏதாவது உங்கள் இருவருக்கும் தெரியுமா?

    மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற கொள்கைப் பதாகைகளைச் சுமந்தபடி நாங்கள் தொடர்ந்து நடத்திய வேள்வியை அறியாமல் நீங்கள் இதுவரை வானத்துத் தேவர்களாய் வாழ்ந்து வந்தீர்களா?

    இப்போதைய கழுகார் விகடன் குழுமத்திற்குப் புதியவரா? உங்கள் இதழில் ‘எங்கே போகிறோம் நாம்?’ என்று தொடர் கட்டுரைகளையும், அரசியல் திறனாய்வுக் கட்டுரைகளையும், ஒவ்வொரு தலைவர்களின் முரண்பாடுகளையும் பகிரங்க மடல்களின் வடிவில் அறச்சீற்றத்துடன் வெளிப்படுத்திய கட்டுரைகளையும் தமிழருவி மணியன் எழுதியதெல்லாம் நேரிய அரசியலுக்கான பங்களிப்பு இல்லையா?

    கஜா புயலில் கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்ட போது ஒற்றை மனிதனாய்க் கல்லூரிகளில் பேசித் துண்டேந்தி 16 லட்சம் ரூபாய்க்குமேல் ஆனந்த விகடன் அறக்கட்டளைக்கு வழங்கிய தமிழருவி மணியனைப் பற்றி உங்களுக்கு என்னதான் தெரியும்?

    கலைஞரின் அழைப்பை ஏற்றுத் திட்டக் குழுவில் பணியாற்றியதும், வைகோவை ஆதரித்ததும், 2014இல் நாடாளுமன்றத் தேர்தலில் இரு திராவிட கட்சிகளுக்கு எதிராகக் கூட்டணியமைத்ததும் விமர்சிக்கப்படலாம். ரஜினியைத் தேர்தல் களத்தில் முன் நிறுத்த முயன்றது கொச்சைப் படுத்தப்படலாம். ஆனால், இவற்றின் மூலம் பழியையும் பகையையும் அன்றி வேறெந்தப் பயனையும் தமிழருவி மணியன் பெற்றுவிடவில்லை. சுய ஆதாயத்திற்காக எந்த நிலையிலும் செயற்பட்டவனில்லை தமிழருவி மணியன். உங்கள் இருவர் அகராதியில் அமைச்சர்களாக வலம் வருவதும், சாதியைச் சொல்லிக் கட்டப் பஞ்சாயத்து செய்வதும், மதத்தைக் காட்டி மக்களைப் பிரிப்பதும், இனம், மொழி என்று இளைஞர்களை ஏமாற்றுவதும், கொள்கை பேசிக் கொள்ளை அடிப்பதும் மட்டுமே அரசியல் பங்களிப்பு என்றால் அதைத் தமிழருவி மணியன் எந்நாளும் செயததில்லை என்பது உண்மைதான்.

    – தமிழருவி மணியன்

    Tags: PoliticsRajinikanthTamilaruvi Manianஅரசியல்தமிழருவி மணியன்ரஜினிகாந்த்
    Share199Tweet124Share50
    The Editor

    The Editor

    Related Posts

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    by The Editor
    July 13, 2026
    0

    ஷோயிங் பிசினஸ் (Showing Business) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயா, இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய 'பாகுபலி' படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா...

    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    by The Editor
    June 18, 2026
    0

    பிரபல தயாரிப்பாளரான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள எங்கள் தங்கம் திரைப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ்...

    சாருகேசி பட விமர்சனம்

    சாருகேசி பட விமர்சனம்

    by The Editor
    June 18, 2026
    0

    கர்நாடக இசை மேதை ஒருவரின் வீட்டில் நடக்கும் பிரச்சினைகள், ஏற்படும் சிக்கல்கள் அவற்றிலிருந்து அந்தக் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதை வைத்து பின்னப்பட்ட கதை இந்த சாருகேசி....

    Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

    Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

    by The Editor
    June 16, 2026
    0

    முதலில் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி- அவரது நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு ( Mana Sangara Vara Prasad Garu) திரைப்படத்தின் மூலம்...

    • Trending
    • Comments
    • Latest
    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    February 5, 2022
    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    June 13, 2022
    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    November 24, 2020
    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    0

    The Scary Reason Healthy People Die After an ER Visit

    0

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    0
    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    July 13, 2026
    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    June 18, 2026
    சாருகேசி பட விமர்சனம்

    சாருகேசி பட விமர்சனம்

    June 18, 2026
    Vanakkam India

    Copyright © 2009 Vanakkamindia Media

    Navigate Site

    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact

    Follow Us

    No Result
    View All Result
    • Home

    Copyright © 2009 Vanakkamindia Media

    Login to your account below

    Forgotten Password?

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In