மத்திய அரசின் ஸ்வச் சுர்வேக்சான் திட்டத்தின் கீழ் நாட்டின் தூய்மையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான
இந்தியாவின் முதல் பத்து சுத்தமான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம். இதில் தொடர்ந்து 5வது ஆண்டாக முதலிடத்தில் திகழ்கிறது மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம்.
1. இந்தூர்

தொடர்ந்து 5வது ஆண்டாக சுத்தமான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது இந்தூர் நகரம்.
2. சூரத்

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் இந்த ஆண்டும் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
3 விஜயவாடா

கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த ஆந்திர தலைநகர் விஜயவாடா, இந்த ஆண்டு மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
4. நவி மும்பை

மகாராஷ்ட்ராவின் நவி மும்பை நான்காவது சுத்தமான நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
5. புனே

மகாராஷ்ட்ராவின் இன்னொரு முக்கிய நகரமான புனேவுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.
6. ராய்ப்பூர்

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரான ராய்ப்பூர் தொடர்ந்து மூன்றாவது முறையாக 6ம் இடத்தைப் பெற்றுள்ளது.
7. போபால்

மத்திய பிரதேச மாநிலத் தலைநகரான போபாலுக்கு இந்தப் பட்டியலில் 7வது இடம் கிடைத்துள்ளது.
8. வதோத்ரா

குஜராத்தின் மற்றொரு நகரான வதோத்ராவுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.
9. விசாகப்பட்டினம்

ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய நகரமான விசாகப்பட்டினத்துக்கு சுத்தமான நகரங்களின் பட்டியலில் 9வது இடம் கிடைத்துள்ளது.
10. அகமதாபாத்

நாட்டின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் 10வது இடத்தில் அகமதாபாத் இடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறும் மூன்றாவது குஜராத் மாநில நகரம் அகமதாபாத்.

























