ஐரோப்பா கண்டத்தில் 28க்கும் அதிகமான நாடுகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் கேஜிஎஃப் 2.
யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கேஜிஎஃப் 2 படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி உலகெங்கும் வெளியாகும் கேஜிஎஃப் 2, வெளயீட்டுக்கு முன்பே பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.
இதுவரை தமிழ், கன்னடப் படங்கள் வெளியாகாத நாடுகளில் கூட முதல் முறைாக கேஜிஎஃப் 2 வெளியாகிறது. குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் முதல் முறையாக வெளியாகும் தமிழ்ப் படம் கேஜிஎஃப் 2தான்.
ஐரோப்பாவில் மட்டும் 28-க்கும் அதிகமான நாடுகளில் இந்தப் படம் வெளியாகிறது. இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் அதிக அரங்குகளில் கேஜிஎஃப் 2 வெளியாகிறது.
ஐரோப்பா தவிர்த்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் மிக அதிக அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. உலகம் முழுவதும் மொத்தம் 7000 அரங்குகளில் கேஜிஎஃப் 2 வெளியாகிறது.
ரூ100 கோடி செலவில் உருவாக்ககப்பட்டுள்ள இந்தப் படம், வெளியாகும் முதல் நாளன்றே ரூ 100 கோடிக்கும் மேல் வசூலைக் குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

























