• Latest
  • Trending
  • All
4வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி… 2-1 முன்னிலை!

4வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி… 2-1 முன்னிலை!

September 7, 2021
டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

October 16, 2025
விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

August 29, 2025
வீர வணக்கம் பட விமர்சனம்

வீர வணக்கம் பட விமர்சனம்

August 29, 2025
வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

July 29, 2025
ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

July 28, 2025
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

July 28, 2025
‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

July 28, 2025
வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

July 28, 2025
அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

July 23, 2025
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

July 22, 2025
சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

July 18, 2025
ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

July 16, 2025
    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact
    INDIA  |  US EDITION
    Saturday, April 18, 2026
    Vanakkam India
    • Home
    • தலைப்புச் செய்தி
    • தமிழ் சினிமா
    • நம்ம ஸ்டேட்ல
    • விளையாட்டு
    • வணிகம்
    • விமர்சனம்
    No Result
    View All Result
    Vanakkam India
    No Result
    View All Result
    Home கிரிக்கெட்

    4வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி… 2-1 முன்னிலை!

    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 2-1 முன்னிலை பெற்றது.

    by The Editor
    September 7, 2021
    in கிரிக்கெட், தலைப்புச் செய்தி
    0
    4வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி… 2-1 முன்னிலை!
    493
    SHARES
    1.4k
    VIEWS
    Share on FacebookShare on Twitter

    லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சதமும் (127 ரன்கள்), புஜாரா (61 ரன்கள்), ரிஷாப் பண்ட் (50 ரன்கள்), ஷர்துல் தாக்குர் (60 ரன்கள்) அரைசதமும் அடித்தனர்.

    இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த கடினமான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 32 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் 31 ரன்னுடனும், ஹசீப் ஹமீத் 43 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    கடைசி நாள் ஆட்டம்

    நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 291 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். இருவரும் தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தியதுடன், ஏதுவான பந்துகளை விரட்டி ரன்கள் எடுக்கவும் தவறவில்லை.

    அணியின் ஸ்கோர் 100 ரன்களைத் (40.4 ஓவரில்) தொட்ட போது தொடக்க ஜோடி பிரிந்தது. 11-வது அரைசதம் அடித்த ரோரி பர்ன்ஸ் (50 ரன்கள், 125 பந்து, 5 பவுண்டரி) ஷர்துல் தாக்குர் வீசிய அடுத்த பந்திலேயே விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் கண்ட டேவிட் மலான் 5 ரன் எடுத்த நிலையில் ‘ரன்-அவுட்’ ஆனார். முன்னதாக ஹசீப் ஹமீத் 123 பந்துகளில் தனது 4-வது அரைசதத்தை கடந்தார்.

    இதனை அடுத்து கேப்டன் ஜோ ரூட் களம் இறங்கினார். நிலைத்து நின்று ஆடிய ஹசீப் ஹமீத் (63 ரன்கள், 193 பந்துகள், 6 பவுண்டரி) ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த ஆலி போப் (2 ரன்), ஜானி பேர்ஸ்டோ (0) விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது ‘ஸ்விங்’ மற்றும் துல்லியமான ‘யார்க்கர்’ பந்து வீச்சில் சாய்த்தார். ஆலி போப் விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா கைப்பற்றிய 100-வது விக்கெட்டாகும். அவர் தனது 24-வது டெஸ்டில் இந்த இலக்கை எட்டினார். அடுத்து வந்த மொயீன் அலி (0) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

    இதைத்தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ், ஜோ ரூட்டுடன் கைகோர்த்தார். இந்திய பவுலர்கள் நேர்த்தியான பந்து வீச்சு மூலம் தொடர்ந்து நெருக்கடி அளித்தனர். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் டிரா செய்யும் நோக்குடன் நிதானமான ஆட்டத்தை கையாண்டு போராடினார்கள். ஆனால் இந்த போராட்டத்தில் அவர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

    இந்திய அணி வெற்றி

    80-வது ஓவர் முடிந்ததும் புதிய பந்து எடுக்கப்பட்டது. புதிய பந்தில் முதல் ஓவரை வீசிய ஷர்துல் தாக்குர், கேப்டன் ஜோ ரூட் (36 ரன்கள், 78 பந்து, 3 பவுண்டரி) விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன் அந்த அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது. பரபரப்பான ஆட்டத்தில் கடைசி வரிசை வீரர்களான கிறிஸ் வோக்ஸ் (18 ரன்), கிரேக் ஓவர்டான் (10 ரன்), ஜேம்ஸ் ஆண்டர்சன் (2 ரன்) ஆகியோரது விக்கெட்டுகளை உமேஷ் யாதவ் கபளீகரம் செய்தார்.

    100 ரன்கள் வரை விக்கெட்டுகளை இழக்காமல் இருந்த இங்கிலாந்து அணி, அடுத்த 110 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    92.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 210 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆலி ராபின்சன் 10 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். சதம் அடித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    அடுத்த ஆட்டம்

    இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் 2 டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று இருப்பது இது 2-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 1986-ம் ஆண்டில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி இங்கு 2 டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

     

    Tags: 4th Test4வது டெஸ்ட்India vs Englandஇங்கிலாந்துஇந்தியா
    Share197Tweet123Share49
    The Editor

    The Editor

    Related Posts

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    by The Editor
    October 16, 2025
    0

    வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்களின்...

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    by The Editor
    August 29, 2025
    0

    RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், கமர்ஷியல்...

    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    by The Editor
    August 29, 2025
    0

    நடிகர்கள்: சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம்குமார், சுரபி லக்ஷ்மி, பிகே மேதினி, ஆதர்ஷ், சிதங்கனா, ஆஷ்விகா இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் ஜேம்ஸ் வசந்தன்,...

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    by The Editor
    July 29, 2025
    0

    இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் சினிமாட்டிக் யுனிவர்சின மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'. இப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர்...

    • Trending
    • Comments
    • Latest
    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    February 5, 2022
    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    June 13, 2022
    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    November 24, 2020
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    0

    The Scary Reason Healthy People Die After an ER Visit

    0

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    0
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    October 16, 2025
    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    August 29, 2025
    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    August 29, 2025
    Vanakkam India

    Copyright © 2009 Vanakkamindia Media

    Navigate Site

    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact

    Follow Us

    No Result
    View All Result
    • Home

    Copyright © 2009 Vanakkamindia Media

    Login to your account below

    Forgotten Password?

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In