Take a fresh look at your lifestyle.

பிக்பாஸ்… கமல் ஹாஸனை வெளுத்த முதல்வர் பழனிசாமி!

9

பெரம்பலுார்: அரியலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல்வர் பழனிசாமி நேற்று, ரூ.192.59 கோடி மதிப்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன், ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக ஆட்சி குறித்த கமல் ஹாஸனின் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், “நடிகர் கமல் ஹாஸன் ஓய்வு பெற்ற பின், அரசிலுக்கு வந்துள்ளார். 70 வயதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிக்பாஸ் நடத்துபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும். அந்த பிக்பாஸை பார்த்தால் எந்த குடும்பமாவது உருப்படுமா… கெட்டுத்தான் போகும். அப்படிபட்டவர் ஒரு கட்சியின் தலைவராக உள்ளார். அப்படிபட்ட தலைவரின் கேள்விக்கெல்லாம் கருத்து சொல்ல முடியுமா?

பிக்பாஸில் என்ன இருக்கிறது என்று, அதை கமல் நடத்தி வருகிறார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்பவர் அவர் அல்ல. நல்லாயிருக்கும் குடும்பத்தை கெடுப்பது தான் அவர் வேலை.

இந்த தொடரை பார்த்தால் குழந்தைகளும் கெட்டுப் போகும். நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டு போகும். எம்.ஜி.ஆர்., நடித்த படங்கள் அனைத்தும் நல்ல படங்கள். மக்களுக்கு எவ்வளவு கருத்துள்ள பாடல்களைத் தந்தார் எம்ஜிஆர். கமல் ஒரு நல்ல படமாவது எடுத்துள்ளாரா?,” என்றார்.