Take a fresh look at your lifestyle.

ஐ யாம் கேம் பட விமர்சனம்

துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளம், தமிழில் வெளியாகி உள்ள ஐ யாம் கேம் படத்தின் விமர்சனம்.

5

சூதாட்டத்துக்கு அடிமையாகி கடனில் மூழ்கும் துல்கர் சல்மான், கிரிக்கெட் ஆர்வலரான ஆண்டனி வர்கீஸ், இந்த இருவரின் வாழ்க்கையும் ஒரு விபத்துக்கு பிறகு ஒருவருடன் ஒருவர் பின்னி விடுகிறது இதிலிருந்து இருவரும் எப்படி மீண்டார்கள் என்பதுதான் இந்த ஐ எம் கேம் படத்தின் கதை l.

ஹாலிவுட் படங்களில் அடிக்கடி கையாளப்படும் உத்திதான் இந்த உடல் மாற்றம் கதை. முதல் முறையாக இந்திய படம் ஒன்றில் பார்க்கும் போது வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.

நாயகனுக்கு விபத்து ஏற்படும்வரை கதை சற்று மெதுவாக நகருகிறது ஆனால் அதன் பிறகு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை அதிலும் நாயகனின் கை அவரது கட்டுப்பாட்டை மீறி தானாக செயல்படுகிற காட்சிகள் எல்லாம் மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன.

எல்லாம் இடைவேளை வரை தான். ஆனால் அதற்கு பிந்தைய காட்சிகளில் புதிய காட்சி அமைப்போ புத்திசாலித்தனமோ சுவாரசியமோ இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காட்சி அமைப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒரு நல்ல விறுவிறுப்பான பேண்டஸி படமாக சென்று இருக்க வேண்டிய கதை, வழக்கமான இந்திய திரைப்படமாக மாறிவிடுகிறது அதிலும் கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய காட்சிகள் எல்லாம் சலிப்புத் தருகின்றன.

படத்தின் பெரும் பலமே துல்கர் சல்மான் தான் ஒற்றை ஆளாக இந்தப் படத்தை தோளில் சுமக்கிறார் மிகுந்த பக்குவமான நடிப்பை தந்திருக்கிறார். இந்த படத்தின் மொத்த பலமும் துல்கர் என்றால் மிகையல்ல.

ஆண்டனி வர்கீஸ், வில்லனாக வருகிற மிஷ்கின், நாயகி கயார்டு லோஹர், சம்யுக்தா உள்ளிட்ட பலரும் குறை இல்லாத நடிப்பை தந்திருக்கிறார்கள்.

படத்தில் துல்கர் – கயார்டு லோஹர் இடையிலான காதல் காட்சிகள் இன்னும் சரியாக காட்டப்பட்டு இருக்கலாம். சும்மா பெயர் அளவிற்கு மட்டும் காட்டி வேக வேகமாக காட்சிகளை முடிக்கிறார்கள். படத்தின் நீளம் இன்னொரு குறை.

ஜிம்ஷி காலித்தின் வண்ணமயமான ஒளிப்பதிவு அசத்துகிறது. ஜேக்ஸ் பிஜயின் பின்னணி இசை படத்துக்கு விறுவிறுப்பை கூட்டுகிறது.

துல்கர் சல்மான் – நஹாஸ் ஹிதாயத் கூட்டணியில் உருவாகி இருக்கும் ஐ அம் கேம் ஒருமுறை பார்க்க கூடிய படைப்பு.