அண்டை மாநிலங்களில் சுட்டுக்கொல்லப்படும் தமிழர்கள்; முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?

கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக அண்டை மாநிலங்களில் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித்தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாகக் கூறப்பட்ட இச்சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையையும், தமிழகத்தில் பெரும் புயலையும் கிளப்பியிருந்தது. தற்போது மீண்டும் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஹனூர் பகுதியில் அமைந்துள்ளது மரியமங்கலம் கிராமம். இந்த கிராமம் காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது.

நேற்று அதிகாலை, தோமையார்பாளையம், மரியமங்கலத்தை சேர்ந்த சிலர், காட்டுக்குள் மான் வேட்டையாட சென்றுள்ளதாக சாக்யா பகுதியை சேர்ந்த வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அவர்கள் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டனர். அப்போது மரியமங்கலம் அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் துப்பாக்கிகளுடன் சிலர் நின்றிருந்ததாகவும், அவர்களை சுற்றிவளைக்கும் போது, அவர்கள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்ததியதாகவும், பதிலுக்கு வனத்துறையினர் சுட்டதாகவும் கூறுகின்றனர்.

Comments (0)
Add Comment