சென்னை: நடிகர் வடிவேலு பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் சில ஆண்டுகள் வரை கொடிகட்டிப் பறந்தவர். ஆனால் விஜயகாந்த் மீதான தனிப்பட்ட கோபத்தில், திமுகவில் சேர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு தீவிர அரசியல் பிரச்சாரம் செய்தார். ஆனால் அந்தத் தேர்தலில் திமுக தோற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டார். வடிவேலு சினிமாவிலிருந்து முற்றாக ஒதுக்கப்பட்டார்.
சினிமாவில் தற்போது அவருக்கு அதிக வாய்ப்பில்லை. இந்த நிலையில் நடிகர் வடிவேலு தற்போது பா.ஜனதாவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பா.ஜனதா சட்டசபை தேர்தலுக்கு முன் தனது பிரசார அணியைத் தயார்படுத்தி வருகிறது.அதற்காக தற்போது நடிகர் வடிவேலுவையும் பா.ஜனதாவில் இணைக்கப்போவதாக செய்திகள் உலாவருகின்றன் ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
ஏற்கனவே பா.ஜனதாவில் நட்சத்திர பட்டாளங்கள் குவிந்துள்ளனர். கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கவுதமி, நமீதா, விஜயகுமார், காய்த்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்தக் கும்பலுடன் வடிவேலுவும் இணைவாரா… பார்க்கலாம்.

























