Take a fresh look at your lifestyle.

‘என் சன்னல் வழியே புதாபெஸ்ட்…’ – இசைஞானி இளையராஜா எடுத்த அழகிய புகைப்படங்கள்!

23

 

ளையராஜா உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர், தமிழின் சிறந்த பாடல் ஆசிரியர், கேட்பவர் உயிரை உருக்கும் இயல்பான குரலுக்குச் சொந்தக்காரர்… இவை மட்டுமல்ல… அவர் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட. ஓய்வு நேரங்களில் அல்லது பயணங்களின் போது கேமராவில் இயற்கையைப் பதிவு செய்வது அவருக்குப் பிடித்த பழக்கம்.

அப்படி அவர் எடுத்த புகைப்படங்களை வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்தது பார்த்தபடி என்ற கண்காட்சி ஒன்றையே சென்னையில் நடத்தினார்கள்.

இப்போது சிம்பனி இசை அமைப்பதற்காக ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்ட் நகருக்குச் சென்றுள்ளார் இளையராஜா. அங்கே தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து புதாபெஸ்ட் நகரின் எழில்மிகு தோற்றத்தை கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் இளையராஜா. அந்தப் படங்களின் தொகுப்பு இதோ…