ரஜினி நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. உலகம் முழுவதும் பல ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது இந்தப் படம். வெளிநாடுகளில் மட்டும் 1100 க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகி புதிய சாதனை படைத்தது.
குடும்பப் படமாக அமைந்துள்ள அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என ஒரு சாரார் கருத்து தெரிவித்தனர். விமர்சகர்கள் அண்ணாத்த படத்திற்கு எதிராக கருத்துக்களைக் கூறி வந்தனர். ஆனால் பொதுமக்கள், பெண்கள் குடும்பத்துடன் பார்த்து ஆதரவைத் தெரிவித்தனர். இதனால் படம் 10 நாட்களில் 220 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்தது.
இந்த நிலையில், ஒரு யூடியூப் சேனலில் அண்ணாத்த படத்தின் விமர்சனம் என்ற பெயரில் மிகவும் கீழ்த்தரமான, கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியிருப்பது பெரும் ரஜினி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த சேனலுக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்று தொடர்ந்து ஆபாசமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி வரும் குறிப்பிட்ட அந்த யூடியூப் சேனலை முடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மாதிரி ஒரு கேவலமான சேனல் நடத்தி வரும் நபர்கள் தங்களை அரசுக்கும் முதல்வருக்கும் நெருக்கமானவர்களாகக் காட்டி தப்பிக்க முயல்வதாகவும் ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் படத்துடன் பதிவிட்டுள்ளனர்.
It's okay to hate a film& register your opinion but personal attacks,& unparliamentary language should never ever be encouraged. Sad that a section of youngsters enjoying it. @CMOTamilnadu should take strict action against #PlipPlip YouTubers. Their#Annaththe roast is 😡😡
— Rajasekar (@sekartweets) November 13, 2021
Dear CM @MKstalin I am sure a youtube video of a certain #PlipPlip disgracing Thalaivar @rajinikanth ANNATHE has been brought to ur attention
It's shocking to see such low lives /repeat offenders have been encouraged at the Chief Minister's office @KanimozhiDMK @Udhaystalin pic.twitter.com/ce135xpvDE— Gayathri Doraiswami (@gthricv) November 13, 2021
விளக்கம்
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அந்த யூட்யூப் சேனல் நபர், ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில், கெட்டவார்த்தை பிரயோகிப்பது தவறே இல்லை என்றும், சமூக நீதி சமத்துவம் என்றெல்லாம் சம்பந்தமே இல்லாமல் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது ரசிகர்களை மேலும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
இந்த சேனல் மற்றும் அதில் கெட்டவார்த்தைப் பேசிய நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ரஜினி ரசிகர்கள் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகாரும் அளித்துள்ளனர்.
























