Take a fresh look at your lifestyle.

சினிமாவுக்கு முழுக்கு… அரசியலுக்கு தயாராகும் திரிஷா!

சினிமாவுக்கு முறுக்கு போடுவதாக த்ரிஷா விரைவில் அறிவிப்பார் என்றும் அதன் பிறகு முழு நேரமாக அரசியல் களத்தில் இறங்குவார் என்றும் கூறப்படுகிறது.

28

நடிகர் விஜய் முதல்வர் ஆன பிறகு, நடிகை திரிஷா குறித்து பல்வேறு பரபரப்பு செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

அதில் முக்கியமானது திரிஷா விரைவில் அரசியலுக்கு வருவார், தமிழக வெற்றி கழகத்தில் முக்கியமான பொறுப்பு அவருக்கு தரப்படும, இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்று அமைச்சரவையிலும் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் பலவிதமான செய்திகள் உலா வருகின்றன.

இந்த நிலையில் நடிகை திரிஷா புதிய பட வாய்ப்புகள் எதையும் ஒப்புக் கொள்வதில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. அரசியலில் முழு நேரமாக ஈடுபட வேண்டும் என்பதற்காகவே சினிமா வாய்ப்புகளை அடியோடு புறக்கணிப்பதாக கூறுகின்றனர்.

வெளிப்படையாகவே சினிமாவுக்கு முறுக்கு போடுவதாக த்ரிஷா விரைவில் அறிவிப்பார் என்றும் அதன் பிறகு முழு நேரமாக அரசியல் களத்தில் இறங்குவார் என்றும் கூறப்படுகிறது.