ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் ‘RED FLOWER” ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம். கதையின் நாயகனாக விக்னேஷ் நடிக்கின்றார், எழுதி இயக்குகிறார் ஆண்ட்ரூ பாண்டியன்’.

தனது வித்தியாச நடிப்பால் ரசிகர்களையும் திரையுலகினரையும் மகிழ்வித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி “RED FLOWER” படத்தின் புதிய லுக் போஸ்டரை வெளியிட்டார்.
இப்படத்தில் விக்னேஷ் பாத்திரமும் அவரது தோற்றமும் , நடிப்பும் நிச்சயம் படம் பார்ப்பவர்களை ஈர்க்கும் என்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன்.

மீண்டும் ஒரு முறை விக்னேஷை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்தப் அவரது ரசிகர்களிடம் போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது.
மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய , சந்தோஷ் ராம் இசை அமைக்க , படத்தொகுப்பு அரவிந்தன் ஆறுமுகம் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன்.


























