மும்பை: தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் 9 படங்களை ப்ரைம் வீடியோவில் வெளியிட உள்ளது அமேசான் தளம்.
வருண் தவான் மற்றும் சாரா அலி கான் நடித்த கூலி நம்பர் 1, ராஜ்குமார் ராவ் நடித்த சலாங், பூமி பெட்னேக்கரின் துர்காவதி, ஆனந்த் தேவரகொண்ட நடித்த மிடில் கிளாஸ் மெலடிஸ் (தெலுங்கு), மாதவன் நடித்த மாரா (தமிழ்), பீமா சேனா நளமகாராஜா மற்றும் ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்), இந்த படங்கள் 2020 அக்டோபர் 15 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் திரையிடப்படும்.
அந்தப் படங்கள்:
வருண் தவான் நடிக்கும் (ஜட்வா 2, ஸ்ட்ரீட் டான்சர் 3 டி)
சாரா அலி கானின் (சிம்பா) ராஜ்கும்மர் ராவ் (டிராப்ட், ஸ்ட்ரீ)
நுஷ்ரத் பருச்சாவின் ( சோனு கி டிட்டு கி ஸ்வீட்டி),
பூமி பெட்னேகரின் துர்காவதி (சுப் மங்கல் சவ்தான், டாய்லெட்: ஏக் பிரேம் கதா),
அரவிந்த் ஐயர் நடித்த பீமா சேனா நளமகாராஜா (கன்னடம்),
ஆனந்த் தேவாரகொண்டா நடித்த மிடில் கிளாஸ் மெலடிஸ் (தெலுங்கு),
ஆர். மாதவனின் மாரா (தமிழ்).
வர்ஷா போலம்மா (பிகில்) நடித்த மன்னே நம்பர் 13
சேதன் கந்தர்வா (மெலடி)
சகாரியா முகமதுவின் ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்)
சேதன் கந்தர்வா (மெலடி) நடித்த மன்னே எண் 13 (கன்னடம்)
மற்றும்
சூர்யா நடித்த சூரரை போற்று (தமிழ்)

இந்த திரைப்படங்கள் 2020 க்குள் உலகளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் ப்ரைம் வீடியோவில் பிரத்தியேகமாகத் திரையிடப்படும்.
இதுகுறித்து அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவின் இயக்குநர் கவுரவ் காந்தி கூறுகையில், “இந்தியாவில் படங்கள் பார்க்கப்படும் முறையில் நேரடி டிஜிட்டல் வெளியீடுகள் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. படங்கள் நாடு முழுவதும் அதிக பார்வையாளர்களிடம் சென்றடைய அமேசான் ப்ரைம் வீடியோ உதவுவதோடு மட்டுமல்லாமல், 200+ நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் இருந்து உருவான உலகத் தரம் வாய்ந்த படங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எங்களின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள டிஜிட்டல் வெளியீடுகளுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் அந்தந்த சொந்த மாநிலங்களைத் தவிர்த்து வெளிமாநிலத்தைச் சேர்ந்த பார்வையாளர்கள்தான். நல்ல கதைகளை டிஜிட்டலில் வெளியிடுவதால் பார்வையாளர்கள் அதிகரிப்பார்கள் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும். எங்கள் புதிய வெளியீடுகளுக்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.

























