இரண்டாம் குத்து படத்தின் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் ட்விட்டரில், சாதனை இயக்குநர் பாரதிராஜா குறித்து தவறாக வெளியிட்ட பதிவுக்கு மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார்.
சந்தோஷ் ஜெயக்குமார் என்பவர் இயக்கியுள்ள ‘இரண்டாம் குத்து’ படத்தின் ட்ரெய்லர், போஸ்டர் ஆகியவை சில தினங்களுக்கு முன் வெளியாகின. இவை ஆபாசக் குவியலாக இருப்பதாகக் கூறி, இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கை ஊடகங்களில் வெளியானதும், இரண்டாம் குத்து இயக்குநர், பாரதிராஜா இயக்கிய டிக்..டிக்..டிக்.. படத்தின் போஸ்டரை வெளியிட்டு பதிலளித்துள்ளார்.
“அனைவரும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். 1981ஆம் ஆண்டு ‘டிக்.. டிக்.. டிக்..’ படத்தில் இதைப் பார்த்துக் கூசாத கண்ணு, இப்போது கூசிருச்சோ..?” என்று கூறி டிக்..டிக்..டிக்… படத்தின் போஸ்டரையும் தனது பதிவில் இணைத்திருந்தார். அவரது இந்தப் பதிவுக்கு அனைத்து தரப்பிலும் கடும் கண்டனம் கிளம்பியது.
பாரதிராஜா என்ற இமயத்தை, ஒரு ஆபாசப்பட இயக்குநர் அவமதிப்பதா என எதிர்ப்புகள் குவிந்த நிலையில், இன்று உடனடியாக மன்னிப்புக் கோரி கடிதம் எழுதியுள்ளார் சந்தோஷ் ஜெயக்குமார்.
அந்தக் கடிதம்:


























