• Latest
  • Trending
  • All
ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

July 16, 2025
டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

October 16, 2025
விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

August 29, 2025
வீர வணக்கம் பட விமர்சனம்

வீர வணக்கம் பட விமர்சனம்

August 29, 2025
வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

July 29, 2025
ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

July 28, 2025
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

July 28, 2025
‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

July 28, 2025
வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

July 28, 2025
அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

July 23, 2025
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

July 22, 2025
சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

July 18, 2025
“ஒரே ஒரு போன் கால்.. திரும்பி பார்க்க வெச்ச விஜய்ணா”: பன் பட்டர் ஜாம் ஹீரோ பேச்சு

“ஒரே ஒரு போன் கால்.. திரும்பி பார்க்க வெச்ச விஜய்ணா”: பன் பட்டர் ஜாம் ஹீரோ பேச்சு

July 8, 2025
    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact
    INDIA  |  US EDITION
    Friday, June 5, 2026
    Vanakkam India
    • Home
    • தலைப்புச் செய்தி
    • தமிழ் சினிமா
    • நம்ம ஸ்டேட்ல
    • விளையாட்டு
    • வணிகம்
    • விமர்சனம்
    No Result
    View All Result
    Vanakkam India
    No Result
    View All Result
    Home தமிழ் சினிமா

    ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

    கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்” (Red flower). ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடந்தது.

    by The Editor
    July 16, 2025
    in தமிழ் சினிமா
    0
    ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு
    501
    SHARES
    1.4k
    VIEWS
    Share on FacebookShare on Twitter

     

    ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்” (Red flower). ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடிகர் விஷால், இயக்குனர்கள் பி.வாசு, சுராஜ் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

    இந்நிகழ்வினில்..

    ரெட் ஃப்ளவர் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் பேசியதாவது:

    “ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸின் முதல் மற்றும் மிக பிரமாண்டமான தயாரிப்பு இந்த ரெட் ஃப்ளவர். மேடையில் இருப்பவர்கள் மட்டும் சிறப்பு விருந்தினர்கள் அல்ல, இங்கு வந்திருக்கும் எல்லோருமே என்னுடைய சிறப்பு விருந்தினர்கள் தான். இந்த படம் தொடங்கிய நாளில் இருந்து இந்த நொடி வரை மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்துக்கு மிகப்பெரிய நன்றி. இரண்டு படங்கள் எடுத்து முடித்தும் இதுவரை ரிலீஸ் செய்யவில்லை. முதல் படமாக இந்த படம் தான் ரிலீஸாக வேண்டும் என்பது தான் என் ஆசை. இது ஒரு காதல் கதையோ, குடும்பக் கதையோ அல்ல. இந்தியாவை உயர்த்தி சொல்லும் ஒரு படம். இந்தியா வல்லரசு என்று சொன்னால் யாராலும் அதை மறுக்க முடியாது. இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இந்த தலைமுறையின் ஒரு சிறந்த இயக்குனராக வருவார்”.

    இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் பேசியதாவது:

    “2047-ல் மால்கம் வரி செலுத்த மறுக்கும் நாடுகளின் மீது போர் தொடுக்கிறது, நேதாஜியால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் ரெட் ஃப்ளவர். அதை இந்தியா எப்படி அணுகுகிறது. இந்தியா எப்படி அதை முறியடிக்கிறது. கேமரா மேன் ஒரு நாளைக்கு 300 முதல் 350 ஷாட்ஸ் எடுப்பார். அவ்வளவு வேகமாக வேலை செய்பவர். எடிட்டரின் பங்கு அபரிமிதமானது.”

    நடிகர் விக்னேஷ் பேசியதாவது:

    “எனக்கு இயக்குநர் பாரதிராஜா மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. அவருக்கு இணையாக பி.வாசு சாரை பிடிக்கும். புரட்சித் தளபதி விஷால் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். மனிதாபிமானம் மிக்கவர். நடிகர் சங்கத்தில் யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும், உதவி தேவைப்பட்டாலும் உடனே இறங்கி வேலை செய்பவர். ஒய்ஜி மகேந்திரன் அவர்களின் ஆர்வம் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தை பற்றி தினமும் கேட்டுக் கொண்டே இருப்பார். ஜான் விஜய், அஜய் ரத்னம், சுரேஷ் மேனன் என அத்தனை நடிகர்களும் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்களை பொறுத்தவரை எல்லோருமே இளைஞர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. இயக்குனர் ஆண்ட்ரூ நல்ல மனிதர், நேர்மையான உழைப்பை தந்துள்ளார். நிறைய பேர் விக்னேஷை வைத்து படம் எடுக்காதீர்கள் என தயாரிப்பாளரை தடுத்தனர். ஆனால் மாணிக்கம் சார் பின்வாங்காமல் படத்தை முடித்திருக்கிறார். அவர் சினிமாவில் சம்பாதிக்க வரவில்லை. சினிமா மீது பற்று வைத்துள்ளார். அவருக்காக மிகப்பெரிய வெற்றி அடையும். இந்த படம் வெற்றி அடைந்தால் அவர் அடுத்தடுத்து பல படங்களை தயாரிப்பார்.

    30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் கஷ்டப்பட்டிருக்கிறேன். எவ்வளவோ உழைத்திருக்கிறேன். சினிமா தான் எனக்கு எல்லாமே. சினிமாவை அவ்வளவு பிடிக்கும். அதனால் தான் இவ்வளவு நாள் கழித்தும் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். நான் தோற்கலாம், ஆனால் என் முயற்சி தோற்கக்கூடாது.

    முன்பெல்லாம் முதல் வாரம் கூட்டமே இல்லாமல் இருந்தால் கூட, ஓரிரு வாரங்கள் கழித்து லேட் பிக்கப் ஆகி வெற்றி பெறும். என்னுடைய சின்னத்தாயி, ராமன் அப்துல்லா போன்ற படங்கள் எல்லாமே லேட் பிக்கப் தான். ஆனால் இப்போது முதல் நாளே நன்றாக ஓடினால் தான் படம் வெற்றி அடையும். அதனால் ஒரு வாரம் கழித்து பார்க்கலாம், அப்புறம் பார்க்கலாம் என நினைக்காதீர்கள். தியேட்டரில் சென்று பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

    நிக்ழ்ச்சியில் நடிகர்கள் விஷால், ஜான் விஜய், ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய். அஜய் ரத்னம், இயக்குநர்கள் பி வாசு, சுராஜ், திருமலை. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன், ஃபைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்டோர் பேசினர்.

    ரெட் ஃப்ளவர் திரைப்படத்தில் நடிகர் விக்னேஷூக்கு ஜோடியாக மனிஷா ஜஷ்னானி நடிக்கிறார். படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்திற்கு கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய , சந்தோஷ் ராம் இசை அமைக்க , படத்தொகுப்பு அரவிந்தன் ஆறுமுகம் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன். ஆகஸ்ட் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ரெட் ஃப்ளவர்.

    Tags: Red FlowerVignéshரெட் ஃப்ளவர்.விக்னேஷ்
    Share200Tweet125Share50
    The Editor

    The Editor

    Related Posts

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    by The Editor
    October 16, 2025
    0

    வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்களின்...

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    by The Editor
    August 29, 2025
    0

    RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், கமர்ஷியல்...

    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    by The Editor
    August 29, 2025
    0

    நடிகர்கள்: சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம்குமார், சுரபி லக்ஷ்மி, பிகே மேதினி, ஆதர்ஷ், சிதங்கனா, ஆஷ்விகா இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் ஜேம்ஸ் வசந்தன்,...

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    by The Editor
    July 29, 2025
    0

    இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் சினிமாட்டிக் யுனிவர்சின மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'. இப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர்...

    • Trending
    • Comments
    • Latest
    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    February 5, 2022
    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    June 13, 2022
    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    November 24, 2020
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    0

    The Scary Reason Healthy People Die After an ER Visit

    0

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    0
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    October 16, 2025
    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    August 29, 2025
    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    August 29, 2025
    Vanakkam India

    Copyright © 2009 Vanakkamindia Media

    Navigate Site

    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact

    Follow Us

    No Result
    View All Result
    • Home

    Copyright © 2009 Vanakkamindia Media

    Login to your account below

    Forgotten Password?

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In