• Latest
  • Trending
  • All
‘ஏங்க மணிரத்னம்… இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணமான கல்கியை கண்டுக்காம விட்டுட்டீங்களே!’

‘ஏங்க மணிரத்னம்… இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணமான கல்கியை கண்டுக்காம விட்டுட்டீங்களே!’

October 9, 2022
டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

October 16, 2025
விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

August 29, 2025
வீர வணக்கம் பட விமர்சனம்

வீர வணக்கம் பட விமர்சனம்

August 29, 2025
வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

July 29, 2025
ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

July 28, 2025
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

July 28, 2025
‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

July 28, 2025
வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

July 28, 2025
அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

July 23, 2025
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

July 22, 2025
சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

July 18, 2025
ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

July 16, 2025
    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact
    INDIA  |  US EDITION
    Sunday, April 19, 2026
    Vanakkam India
    • Home
    • தலைப்புச் செய்தி
    • தமிழ் சினிமா
    • நம்ம ஸ்டேட்ல
    • விளையாட்டு
    • வணிகம்
    • விமர்சனம்
    No Result
    View All Result
    Vanakkam India
    No Result
    View All Result
    Home தமிழ் சினிமா

    ‘ஏங்க மணிரத்னம்… இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணமான கல்கியை கண்டுக்காம விட்டுட்டீங்களே!’

    பொன்னியின் செல்வன்' படத்தில் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்? என்று பட அதிபர் கேயார் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    by The Editor
    October 9, 2022
    in தமிழ் சினிமா
    0
    ‘ஏங்க மணிரத்னம்… இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணமான கல்கியை கண்டுக்காம விட்டுட்டீங்களே!’
    508
    SHARES
    1.5k
    VIEWS
    Share on FacebookShare on Twitter

    கல்கியின் பெருங்கதையான பொன்னியின் செல்வன் வெளியானதிலிருந்து திரையுலகம், எழுத்துலகம் இரண்டுமே பரபரத்துக் கிடக்கிறது. இவற்றைத் தாண்டி, படம் பெரும் வசூலைப் பெற்றுள்ளது.

    இந்த நிலையில் பொன்னியின் செல்வனை எழுதிய அமரர் கல்கிக்கு உரிய மரியாதையை மணிரத்னம் செய்யவில்லை என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.

    இதுகுறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான கேயார் கூறியுள்ளதாவது:

    “விக்ரம்’ படத்தை போலவே ‘பொன்னியின் செல்வன்’ படமும் முதல் வாரத்தில் நல்ல லாபத்தைப் பார்த்து வருகிறது. ஆனால் ‘விக்ரம்’ படத்தை விட ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் இருந்ததால், அதன் தாக்கம் பெரிதாக இருக்கிறது. ‘விக்ரம்’ படம் வெளிவந்து, ரசிகர்கள் அந்த படத்தை பார்த்த பிறகு தான் ‘ஹிட்’ ஆனது.

    ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு தொடக்கத்திலேயே வெற்றி காத்திருந்தது. இந்த வெற்றிக்கு 50 சதவீத காரணம் அமரர் கல்கி தான். அந்த புகழ் அவரையே சாரும். 20 சதவீதம் ரஜினிகாந்த்-கமல்ஹாசனைச் சென்றடையும். ஏனெனில் ‘பொன்னியின் செல்வன்’ ஆடியோ-டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு இருவரும் வந்து இந்த படத்தைப் பற்றிப் பேசியது, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியது. புத்தகம் படிக்காதவர்களுக்கும் இவர்களின் பேச்சு ஆர்வத்தை தூண்டியது ஆச்சரியத்தை அளித்தது. இதனுடன் சமூக வலைதளங்களில் கொடுக்கப்பட்ட விளம்பரங்களும் முக்கிய காரணம்.

    10 சதவீதம் வெற்றி விடுமுறை நாட்கள் தந்தவை. மீதமுள்ள 20 சதவீதம் வெற்றி தான் டைரக்டர்கள், நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினரைச் சேரும்.

    இந்துக்களுக்கு எப்படி ராமாயணம் இருக்கிறதோ, இனி தமிழர்களுக்கு பொன்னியின் செல்வன் இருக்க போகிறது. இதற்கு காரணம் அமரர் கல்கியின் எழுத்துகள்தான். அவரது 5.5 ஆண்டு கால உழைப்பு அளப்பரியது. எப்படி இந்த புத்தகத்தைப் படிக்காமல் போனோம் என்று அனைவருமே தற்போது வருத்தப்படுகிறார்கள். எனவே இந்த வெற்றியின் பெரும்பங்கு கல்கிக்குத்தான். கல்கி உயிருடன் இருந்தால் காலில் விழுந்திருப்பேன் என்று ரஜினிகாந்தே கூறியிருந்தார்.

    பலருக்கு கைகூடாமல் போன விஷயத்தை வைராக்கியமாக இருந்து சாதித்து காட்டிய மணிரத்னம், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு பாராட்டுகள். இந்த படத்துக்கு ரூ.250 கோடிக்கு மேல் செலவாகி இருக்கிறது. ஆனால் இந்தப் படத்தை 3 பாகமாக உருவாக்கி இருக்கலாம். ஏனெனில் அத்தனை கதாபாத்திரங்களும் முக்கியமானவை. இப்போது 2 பாகங்கள் மட்டுமே என்பதால் கதாபாத்திரங்கள் சற்று தொய்வும், சந்தேகமும் ஏற்படுகிறது. எனக்கே படத்தின் கதாபாத்திரங்களில் சில இடங்களில் திருப்தி இல்லை. ஆனால் அதற்கும், படத்தின் வருமானத்துக்கும் சம்பந்தம் இல்லை.

    இப்போது படம் பார்க்கவில்லை என்றால் பாவம் என்று கூறும் நிலைமை இருக்கிறது. ஆனால் அமரர் கல்கியும், ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கூட்டணியும்தான் இத்தகைய வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த படத்தில் அனைத்து சுமைகளையும் டைரக்டர் மணிரத்னமே தாங்கிக்கொண்டு விட்டார்.

    ஆனாலும் மணிரத்னம் மேல் எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால், கல்கியின் ஒரு மாபெரும் காவியத்தை அவர் படமாக்கி இருக்கிறார். ஆனால் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தப்படவில்லை. படத்தின் முதல் காட்சியில் கூட கல்கி படத்தைக் காட்டவில்லை. கல்கி படத்துடன் கமல்ஹாசன் குரல் ஒலித்திருந்தால் இன்னும் இந்தப் படம் சிறப்படைந்திருக்கும். ஆனால் இதைச் செய்யவில்லை.

    எனவே 2-ம் பாகத்திலாவது இதனை செய்யவேண்டும். ஏனெனில் இந்தப் படத்துக்கு முக்கிய கதாநாயகனே கல்கி தான். அவருக்கு நன்றி செலுத்தியிருக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு சன்மானம் வழங்கி கவுரவித்திருக்க வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது. இதைச் செய்தால் தான் நல்லது. மணிரத்னம் கனவை நிறைவேற்ற லைகா நிறுவனம் இருந்தது. கல்கியின் கனவை கவுரவப்படுத்துவது மணிரத்னம் உள்பட படக்குழுவினரின் கடமையும் கூட!”

    இவ்வாறு அவர் கூறினார்.

    Tags: KalkiManirathnamPonniyin Selvan 1கல்கிபொன்னியின் செல்வன்மணிரத்னம்
    Share203Tweet127Share51
    The Editor

    The Editor

    Related Posts

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    by The Editor
    October 16, 2025
    0

    வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்களின்...

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    by The Editor
    August 29, 2025
    0

    RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், கமர்ஷியல்...

    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    by The Editor
    August 29, 2025
    0

    நடிகர்கள்: சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம்குமார், சுரபி லக்ஷ்மி, பிகே மேதினி, ஆதர்ஷ், சிதங்கனா, ஆஷ்விகா இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் ஜேம்ஸ் வசந்தன்,...

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    by The Editor
    July 29, 2025
    0

    இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் சினிமாட்டிக் யுனிவர்சின மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'. இப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர்...

    • Trending
    • Comments
    • Latest
    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    February 5, 2022
    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    June 13, 2022
    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    November 24, 2020
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    0

    The Scary Reason Healthy People Die After an ER Visit

    0

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    0
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    October 16, 2025
    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    August 29, 2025
    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    August 29, 2025
    Vanakkam India

    Copyright © 2009 Vanakkamindia Media

    Navigate Site

    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact

    Follow Us

    No Result
    View All Result
    • Home

    Copyright © 2009 Vanakkamindia Media

    Login to your account below

    Forgotten Password?

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In