சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதியில் இயல்பை விட 93% அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். தமிழ்நாட்டில், திருநெல்வேலி, நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 100% க்கும் அதிக மழை அளவு பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை 40 செ.மீட்டர் அளவு பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 88 சதவீதம் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது கடந்த 122 ஆண்டுகளில் இது மூன்றாவது அதிக சதவீத மழை அளவாகும். 1906 ஆம் ஆண்டில் 112 செ.மீட்டர் மழை, 1909ம் ஆண்டு 127 செ.மீ மற்றும் 2022ல் 93 செ.மீ மழை பதிவாகியுள்ளது என குறிப்பிட்டார். இதுவே கடந்த 113 ஆண்டுகளில் பதிவாகியுள்ள அதிக மழை. 122 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்ச மழை அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

























