டெல்லி: வரும் டிசம்பர் மாதத்தில் மிகப்பெரிய கொரோனா பரவல் இருக்கலாம் என நாங்கள் கேள்விப்படுகிறோம். எல்லா மாநிலங்களிலிருந்தும் ஒரு சமீபத்திய அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய நாங்கள் கேட்டு கொள்கிறோம் .கொரோனா பரவலுக்கு மாநிலங்கள் தயாராக இல்லை என்றால் டிசம்பர் மாதத்தில் மோசமான பாதிப்புகள் நடக்கக்கூடும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மராட்டிய மாநிலம் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட மாநிலமாகத் தொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமை 5,753 புதிய பாதிப்புகளுடன் மொத்த பாதிப்பு 17.8 லட்சத்தை தாண்டியுள்ளது. குஜராத்தில் சமீபத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது, அகமதாபாத், ராஜ்கோட், சூரத் மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு கட்டாயப்படுத்தியது. இன்று பள்ளிகளையும் கல்லூரிகளையும் மீண்டும் திறக்க வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்புகள் 5.29 லட்சத்தைத் தாண்டி உள்ளது. தொடர்ந்து கொரோனா அதிகரிப்பைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு போராடி வருகிறது, இது ஆறாவது மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாக திகழ்கிறது.

























