டெல்லி: வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியது. இந்தப் புயல் நாளை ஆந்திரா – ஒடிசா பகுதியை அடையும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நாளை காலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதியை நெருங்கும் ஜாவித் புயல், நாளை மறுநாள் ஒடிஷாவின் பூரி பகுதியை அடையும். பின்னர் வடகிழக்கு கடற்கரையில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடக்கு ஆந்திர மாவட்டங்களில் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். அதேபோல தெற்கு ஒடிஷாவின் 14 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவசாகவும், பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளதாகவும் ஒடிஷா அரசு தெரிவித்துள்ளது.
இந்தப் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

























