கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ படம் இயக்கப் போவதாக ஷங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் ஷங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர். தயாரிப்பு நிறுவனமான லைகாதான் ஏகப்பட்ட பணத்தை செலவழித்துவிட்டு, அல்லாடிக் கொண்டிருந்தது.
‘விக்ரம்’ பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்’ என தெரிவித்திருந்தார். இந்த படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி விட்டதாக கூறப்பட்டது. இதனை காஜல் அகர்வால் மறுத்து, படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை ‘இந்தியன்-2’ படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ‘அவர் திரும்ப வந்துவிட்டார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பகிர்ந்துள்ள நடிகர் கமல்ஹாசன் செப்டம்பர் முதல் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
லைகா நிறுவனம்தான் படத்தைத் தொடங்கியது. ஆனால் படம் பாதியில் நின்றுவிட்டது. இப்போது லைகாவுடன் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. லைகா – ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் என்றே புதிய போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘உதயநிதி வந்துட்டாருல்ல… அப்ப படம் நிச்சயம் வெளியாகிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக’ ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
Filming for #Indian2 from September. Wishing team @shankarshanmugh , #Subaskaran , @LycaProductions and everyone else involved a successful journey.
Welcome onboard thambi @Udhaystalin @RedGiantMovies_ https://t.co/iCbBZFX8X4 pic.twitter.com/uKInYMy15W— Kamal Haasan (@ikamalhaasan) August 23, 2022

























