• Latest
  • Trending
  • All
‘அடிப்படை அறிவோ, நேர்மையோ இல்லாத ஆளுநர் ஆர்என் ரவி’ – குடியரசுத் தலைவரிடம் திமுக சரமாரி புகார்

‘அடிப்படை அறிவோ, நேர்மையோ இல்லாத ஆளுநர் ஆர்என் ரவி’ – குடியரசுத் தலைவரிடம் திமுக சரமாரி புகார்

November 9, 2022
டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

October 16, 2025
விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

August 29, 2025
வீர வணக்கம் பட விமர்சனம்

வீர வணக்கம் பட விமர்சனம்

August 29, 2025
வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

July 29, 2025
ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

July 28, 2025
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

July 28, 2025
‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

July 28, 2025
வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

July 28, 2025
அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

July 23, 2025
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

July 22, 2025
சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

July 18, 2025
ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

July 16, 2025
    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact
    INDIA  |  US EDITION
    Saturday, June 6, 2026
    Vanakkam India
    • Home
    • தலைப்புச் செய்தி
    • தமிழ் சினிமா
    • நம்ம ஸ்டேட்ல
    • விளையாட்டு
    • வணிகம்
    • விமர்சனம்
    No Result
    View All Result
    Vanakkam India
    No Result
    View All Result
    Home இன்றைய பரபரப்பு

    ‘அடிப்படை அறிவோ, நேர்மையோ இல்லாத ஆளுநர் ஆர்என் ரவி’ – குடியரசுத் தலைவரிடம் திமுக சரமாரி புகார்

    ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கான அடிப்படை அறிவோ, நேர்மையோ இல்லாமல் செயல்படுகிறார் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி என குடியரசுத் தலைவரிடம் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கூட்டாக புகார் அளித்துள்ளன.

    by The Editor
    November 9, 2022
    in இன்றைய பரபரப்பு, தலைப்புச் செய்தி
    0
    ‘அடிப்படை அறிவோ, நேர்மையோ இல்லாத ஆளுநர் ஆர்என் ரவி’ – குடியரசுத் தலைவரிடம் திமுக சரமாரி புகார்
    505
    SHARES
    1.4k
    VIEWS
    Share on FacebookShare on Twitter

     

    சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி திமுக சார்பில் குடியரசு தலைவருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் அடிக்கடி கருத்து பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில், ஆளுநரை திரும்ப பெற கோரி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    திமுக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட மனு இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    அரசியலமைப்பு மீறி, ஒரு அரசியல் கட்சித் தலைவரைப் போல ஆளுநர் ரவி செயல்படுவதாக ஏற்கனவே திமுகவினர் குற்றச்சாட்டியிருந்த நிலையில், தற்போது மனு அளிக்கப்பட்டுள்ளது.

    மனுவில் ஆளுநர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது திமுக.

    மனு விவரம்:

    “அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் மாநிலத்தின் பெயரளவிலான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசின் செயல்பாடுகளை அவரது பெயரில் முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கொள்கை அளவிலும் செயல்பாட்டளவிலும் எதிர்ப்பது மக்களாட்சிக்கு சாவுமணி அடிப்பதாகும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கையுடன் ஓர் ஆளுநர் இப்படி வெளிப்படையாக முரண்படுவதையோ, சட்டப்பேரவை இயற்றும் சட்டங்களுக்கு காலவரையின்றி ஒப்புதல் தராமல் இருப்பதையோ மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதையோ கற்பனையில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

    ஆளுநரின் அப்படிப்பட்ட செயலால் தமிழ்நாட்டில் எதேச்சதிகார சூழல் நிலவுகிறது.

    தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையும் ஆற்றிவரும் பணிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாக பொதுவெளியில் முரண்படுவது, அவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட முக்கியமான சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது என ஆளுநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. ஒரு சட்டவரைவின் தேவை அல்லது அவசியம் குறித்து ஆளுநர் ஆராய இயலாது. அது சட்டப்பேரவையின் தனியுரிமை. சட்டவரைவு நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டவுடன், அதனை மாநில மக்களின் முடிவாகக் கருதியே செயலாற்ற வேண்டும்.

    தமிழ்நாட்டில் ஆளுநர் தனது முதன்மையான பணியைச் செய்வதில்லை. நீட் விலக்கு சட்ட வரைவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்டது. அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தினார். இது தொடர்பாக உள்துறை அமைச்சரிடமும் முந்தைய குடியரசுத் தலைவரிடமும் கோரிக்கைவைக்கப்பட்டது. இருந்தபோதும் இந்த சட்டவரைவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைக் கையில் எடுத்துக்கொண்டு, சட்டவரைவை சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார். இது அதிகார வரம்பை மீறிய செயல். இத்தகைய செயல்பாடுகள் ஆளுநரின் பொறுப்புக்கு அழகல்ல.

    பல்வேறு மொழிகள், மதங்களைச் சார்ந்தவர்கள் அமைதியாக வாழ்ந்துவரும் தமிழ்நாட்டில், ஆளுநர் அடிக்கடி சமுதாயத்தை பிளவுபடுத்தும் வகையில் பேசுகிறார். தான் வகிக்கும் ஆளுநர் பொறுப்புக்கு சிறிதும் பொறுத்தமற்றவகையில் ஆபத்தான, பிளவுபடுத்தும் நோக்கிலான, மதரீதியான கருத்துகளை பொதுவெளியில் பேசிவருகிறார். மக்களின் மனதில் வெறுப்பைத் தூண்டி, சமூகப் பதற்றத்தைத் உண்டுபண்ணும் நோக்கத்துடன் அவரது பேச்சுகள் அமைகின்றன.

    உலகின் பிற நாடுகளைப் போலவே, இந்தியாவும் ஒரு மதத்தைச் சார்ந்தே உள்ளது என்று ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். இது இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும். சனாதன தர்மத்தைப் போற்றுவது, திருக்குறளுக்கு மதச்சாயம் பூசுவது, திராவிட மரபையும் தமிழ்ப் பெருமையையும் விமர்சிப்பது என கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார்.

    தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது என முடிவுசெய்ய ஆர்.என். ரவி, தமிழ்நாட்டு தேர்தல்கள் எதிலும் வெற்றிபெறவில்லை என்பதை மறந்துவிடுகிறார். அண்மைக்காலமாக மத்திய அரசின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு கைமாறாக ஆளுநர் பதவி தரப்படுகிறது. இவர்களுக்கு ஆளுநர் பொறுப்பை வகிப்பதற்கான அடிப்படை அறிவோ, நேர்மையோ இல்லை. இத்தகைய சீர்கேட்டின் சிறந்த எடுத்துக்காட்டாக ஆர்.என். ரவி விளங்குகிறார்.

    அரசியலமைப்புச் சட்டத்தின் 159வது பிரிவின் கீழ் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தை அவர் மீறிவிட்டார். மதவெறுப்பைத் தூண்டி, மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்.

    சட்டத்தினால் நிறுவப்பட்ட அரசின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதால், அவரது செயல்பாடுகள் தேசத் துரோகமானவை என சிலர் கருதக்கூடும். தான் ஆளுநர் பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர் என்பதை ஆர்.என். ரவி நிரூபித்துவிட்டார். அவர் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்.”

    மேலும், முக ஸ்டாலின் அரசு 2020 ம் ஆண்டிலிருந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாக்கள் 20ஐ இந்த மனுவில் பட்டியலிட்டுள்ளது. ஹூக்கா பார்களைத் தடை செய்யும் சட்டம், பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கான சட்டம், வெளிப்படையான டெண்டருக்கான சட்டம், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் போன்ற சட்டங்கள் இன்னும் ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Tags: DMKGovernor Raviஆளுநர் ஆர்என் ரவிதிமுக மனு
    Share202Tweet126Share51
    The Editor

    The Editor

    Related Posts

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    by The Editor
    October 16, 2025
    0

    வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்களின்...

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    by The Editor
    August 29, 2025
    0

    RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், கமர்ஷியல்...

    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    by The Editor
    August 29, 2025
    0

    நடிகர்கள்: சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம்குமார், சுரபி லக்ஷ்மி, பிகே மேதினி, ஆதர்ஷ், சிதங்கனா, ஆஷ்விகா இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் ஜேம்ஸ் வசந்தன்,...

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    by The Editor
    July 29, 2025
    0

    இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் சினிமாட்டிக் யுனிவர்சின மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'. இப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர்...

    • Trending
    • Comments
    • Latest
    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    February 5, 2022
    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    June 13, 2022
    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    November 24, 2020
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    0

    The Scary Reason Healthy People Die After an ER Visit

    0

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    0
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    October 16, 2025
    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    August 29, 2025
    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    August 29, 2025
    Vanakkam India

    Copyright © 2009 Vanakkamindia Media

    Navigate Site

    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact

    Follow Us

    No Result
    View All Result
    • Home

    Copyright © 2009 Vanakkamindia Media

    Login to your account below

    Forgotten Password?

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In