சிலுவம்பாளையம்: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள் (93), உடல்நலக் குறைவால் காலமானார்.
வயது மூப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தவுசாயி அம்மாள் உயிர் பிரிந்தது.
தகவல் அறிந்ததும், தூத்துக்குடியில் கொரோனா ஆய்வுப் பணிகளில் இருந்த முதல்வர் பழனிசாமி உடனடியாக சாலை மார்க்கமாக காரில் சேலம் புறப்பட்டுச் சென்று, தாயார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில் சிலும்பாளையத்தில் தவுசாயம்மாள் உடலுக்கு இறுதிச்சடங்கு நடக்கிறது.

























