சென்னை: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்க்யுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. 100 க்கு கீழ் இருந்த தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளது. இது நான்காவது அலைக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது .இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

























