<அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘டிமான்டி காலனி’ பாகம் 2 திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.<
2015ம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’. இப்படத்தை மு.க.தமிழரசு தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து,7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.
இரண்டாம் பாகத்திலும் அருள்நிதியே நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அருண் பாண்டியன், பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவி சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைந்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
ஆகஸ்ட் 15ந் தேதி படம் வெளியாக இருப்பதால், படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அண்மையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அருள் நிதி, “lஇந்தப் படம் வழக்கமான பேய் படங்களைப் போல் அல்லாமல் புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் எனவும், திரையரங்குகளுக்கு சென்று பார்த்தால் அந்த அனுபவத்தை உணர முடியும் எனவும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 15ந் தேதி சுகந்திர தினத்தை முன்னிட்டு பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படமும், கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படத்துடன் டிமாண்டி காலனி 2 ம் வெளியாக உள்ளது

























