ஊட்டி பள்ளியில் படிக்கும் எதிரும் புதிருமான இரு மாணவர்கள், ஒரு கட்டத்தில் நட்பாக முயல்கிறார்கள். அப்போது இருவரில் ஒருவன் மூளைச் சாவடைகிறான். அவனது இதயம் ஒரு பெண்ணுக்குப் பொருத்தபடுகிறது. அந்தப் பெண்ணும் பள்ளி சேர்கிறாள். தனக்கு இதயம் கொடுத்தவனின் நண்பனுக்கு உதவ முற்படுகிறாள். ஆனால் அவன் பள்ளியை விட்டு விலகி விடுகிறான். இருவரும் பின்னர் இமயமலையில் சந்திக்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதி.
உண்மையில், படத்தின் கதை என்ன… படம் எப்படி இருக்கும்..? என்றெல்லாம் யாரிடமும் கேட்காமல், எந்த விமர்சனமும் பார்க்காமல் படிக்காமல் இந்தப் படத்தை நல்ல திரை அரங்கில் பாரக்க வேண்டும்.
தமிழ் திரையில் இதுவரை கிடைதிராத புது அனுபவம் கிடைக்கும்.
படத்தின் நிஜ நாயகன் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதை படம் பார்த்தால் உங்களுக்கே புரியும்!
படத்தில் நடித்துள்ள கவுரவ் காளை, பிரவீண், எஸ்தர் மூவருமே அந்தப் பாதிரங்களாகவே மாறி இருக்கிறார்கள். மிக நுட்பமான உணர்வுகளை மிகையின்றி வெளிப்படுத்தி உள்ளனர்.
படத்தின் இன்னொரு சிறப்பு கதீஜா ரஹ்மானின் இனிய இசை.
ஒரு நீண்ட பயணத்தில் வழி நெடுகிலும் சந்திக்கும் மனிதர்கள், அவர்கள் தரும் அனுபவங்களை மிக எதார்த்தமாக படமாக்கியுள்ளனர்.
இயக்குநர் ஹலிதா ஷமீமின் நேர்த்தியான இயக்கம், உருவாக்கம் படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றி இருக்கிறது.
Rating : 4.0/5.0

























