• Latest
  • Trending
  • All
செங்களம் (இணையத் தொடர்) விமர்சனம்

செங்களம் (இணையத் தொடர்) விமர்சனம்

March 25, 2023
டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

October 16, 2025
விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

August 29, 2025
வீர வணக்கம் பட விமர்சனம்

வீர வணக்கம் பட விமர்சனம்

August 29, 2025
வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

July 29, 2025
ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

July 28, 2025
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

July 28, 2025
‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

July 28, 2025
வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

July 28, 2025
அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

July 23, 2025
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

July 22, 2025
சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

July 18, 2025
ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

July 16, 2025
    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact
    INDIA  |  US EDITION
    Saturday, April 18, 2026
    Vanakkam India
    • Home
    • தலைப்புச் செய்தி
    • தமிழ் சினிமா
    • நம்ம ஸ்டேட்ல
    • விளையாட்டு
    • வணிகம்
    • விமர்சனம்
    No Result
    View All Result
    Vanakkam India
    No Result
    View All Result
    Home ஆன்லைன் சினிமா தளம் - OTT

    செங்களம் (இணையத் தொடர்) விமர்சனம்

    எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ள செங்களம் அரசியல் த்ரில்லர் இணையத் தொடரின் விமர்சனம்

    by The Editor
    March 25, 2023
    in ஆன்லைன் சினிமா தளம் - OTT, விமர்சனம்
    0
    செங்களம் (இணையத் தொடர்) விமர்சனம்
    529
    SHARES
    1.5k
    VIEWS
    Share on FacebookShare on Twitter

    நடிகர்கள்: கலையரசன், வாணி போஜன், ஷாலி நிவேகாஸ், விஜி சந்திரசேகர்
    இசை – தரண்குமார்
    தயாரிப்பு – அபி அன்ட் அபி என்டர்டெயின்மென்ட்
    இயக்கம் – எஸ்ஆர் பிரபாகரன்
    வெளியீடு: ஜீ5

    சுந்தரபாண்டியன் பட புகழ் எஸ்ஆர் பிரபாகரன் முதல் முறையாகக இயக்கியிருக்கும் இணையத் தொடர் செங்களம். சற்று மெதுவாக ஆரம்பித்து பரபர அரசியல் த்ரில்லராக முடிகிறது இந்தத் தொடர்.

    கதை இதுதான். விருதுநகர் நகராட்சியின் தலைவர் பதவியை 40 ஆண்டுகளாக தொடர்ந்து தக்க வைத்து கொண்டுள்ளது சிவஞானம் மற்றும் அவரது குடும்பம். தாத்தா, அப்பா, மகன் என அவர்களது மொத்த குடும்பமே பரம்பரை பரம்பரையாக அரசியல் செய்கின்றனர்.

    அந்தத் தொகுதியில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வேல ராமமூர்த்திக்கு இல்லாத செல்வாக்கு கூட, நகராட்சி மன்றத் தலைவருக்கு இருக்கிறது. இதனால், எப்படியாவது இந்த அரசியல் குடும்பத்தை கலைக்க வேண்டும் என முடிவு செய்கிறார். அப்பா சிவஞானத்தை அடுத்து, அவரது மூத்த மகன் ராஜமாணிக்கம் (பவன்) நகராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கும் சூர்யகலாவிற்கும் (வாணி போஜன்) திருமணம் நடக்கிறது. தேனிலவுக்கு கொடைக்கானல் செல்லும்போது ஏற்படும் விபத்தில் ராஜமாணிக்கம் உயிரிழக்கிறார்.

    அடுத்த நகராட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராஜமாணிக்கத்தின் மனைவியான சூர்யகலாவை நிற்க வைத்தால் அனுதாப வாக்குகளில் வெற்றியை அள்ளலாம் எனத் திட்டமிடுகிறார் சிவஞானம். இது அவரது மற்ற இரு மகன்களுக்கும் பிடிக்காமல் போகிறது. ஆனால் சூர்யகலாவுக்கு மெல்ல மெல்ல அந்தப் பதவி மீது மோகம் வருகிறது. இப்போது சிவஞானம் சூர்யகலாவை நிற்க வைக்கத் தயங்குகிறார். யாரை அவர் தேர்வு செய்கிறார் என்பது ஒருபக்கம்.

    இன்னொரு பக்கம், 3 கொலைகளைச் செய்துவிட்டு காட்டில் தலைமறைவாக இருக்கும் கலையரசன் மற்றும் அவரது சகோதரர்கள், மேலும் இரு கொலைகளை போலீசுக்கு சவால் விட்டே செய்கிறார்கள். இந்தக் கொலைகளின் பின்னணி மற்றும் சூர்யகலாவின் அரசியலோடு உள்ள தொடர்பு என்ன என்பதையெல்லாம் விறுவிறுவென விவரிக்கிறது மீதி.

    தமிழ் இணையத் தொடர்களில் முதல் அரசியல் த்ரில்லர் செங்களம்தான் எனலாம். தமிழ்நாட்டு அரசியலில் கொடிகட்டிப் பறக்கும் இரு கழங்களின் அரசியல் வரலாற்றிலிருந்து பல நிகழ்வுகளை, விருதுநகர் மாவட்ட அரசியலாக மாற்றிக் காட்சிப்படுத்தி இருக்கிறார் எஸ்ஆர் பிரபாகரன். கதையோடு பார்வையாளர்களை ஒன்ற வைக்க இது பெரிதும் பயன்பட்டுள்ளது.

    ஆரம்ப அத்தியாயத்திலிருந்து கடைசி அத்தியாயம் வரை ‘அன்று’ ‘இன்று’ என முன்னும் பின்னுமான நிகழ்வுகளை குழப்பமின்றி காட்சிகளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சில அத்தியாயங்கள் மெதுவாகப் போனாலும், இறுதி அத்தியாங்களில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. சூர்யகலாவின் மரணம், நாச்சியாரின் எழுச்சியை ரொம்பவே கவனமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

    கலையரசன், வாணி போஜன், ஷாலி, விஜி, வேல ராமமூர்த்தி, பவன் என அனைவருக்குமே சமமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அவர்களும் தங்கள் வேடங்களுக்கு நியாயம் செய்திருப்பது பாராட்டுக்குரியது.

    மதிப்பீடு: 3.0/5.0

    Share212Tweet132Share53
    The Editor

    The Editor

    Related Posts

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    by The Editor
    October 16, 2025
    0

    வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்களின்...

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    by The Editor
    August 29, 2025
    0

    RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், கமர்ஷியல்...

    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    by The Editor
    August 29, 2025
    0

    நடிகர்கள்: சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம்குமார், சுரபி லக்ஷ்மி, பிகே மேதினி, ஆதர்ஷ், சிதங்கனா, ஆஷ்விகா இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் ஜேம்ஸ் வசந்தன்,...

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    by The Editor
    July 29, 2025
    0

    இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் சினிமாட்டிக் யுனிவர்சின மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'. இப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர்...

    • Trending
    • Comments
    • Latest
    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    February 5, 2022
    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    June 13, 2022
    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    November 24, 2020
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    0

    The Scary Reason Healthy People Die After an ER Visit

    0

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    0
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    October 16, 2025
    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    August 29, 2025
    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    August 29, 2025
    Vanakkam India

    Copyright © 2009 Vanakkamindia Media

    Navigate Site

    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact

    Follow Us

    No Result
    View All Result
    • Home

    Copyright © 2009 Vanakkamindia Media

    Login to your account below

    Forgotten Password?

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In