டெல்லி: நரேந்திர மோடி பிரதமரான 2014ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு மீது தொடர்ச்சியான விமர்சனங்களை வைத்து வருகிறார். அவர் தனது 10 ஆண்டு கால் ஆட்சியின் சாதனைகளைப் பற்றிப் பேசுவதை விட மறைந்த காங்கி்ரஸ் தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் பற்றியே தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இதுகுறித்து அண்மையில் சத்தீஷ்கர் முன்னாள் முதல் அமைச்சர் பூபேஷ் பாகலிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இப்போதெல்லாம் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருக்கிறார் மோடி. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம்கள் அறிக்கை என்கிறார், தாலி அறுப்பு, ஆட்டுக் கறி, மீன் மற்றும் எருமை என என்னவெல்லாமோ பேசுகிறார் மோடி.
பண்டித ஜவரஹர்லால் நேரு குறித்து பேச மோடிக்கு எந்த அருகதையும் இல்லை. அவர் நேரு குறித்த தவறான பிம்பத்தை ஏற்படுத்த முனைகிறார். ஆனால் நேருவின் கால்தூசுக்கு ஈடாக மாட்டார் இந்த நரேந்திர மோடி. இன்னும் 10 பிறவிகள் எடுத்தாலும் அவரால் நேருவாகிவிட முடியாது.
இப்போது அவர் தன்னை கடவுளின் அவதாரமாகப் பேசுகிறார். அவரது மனநிலை திடமாக உள்ளதா என்பதில் சந்தேகம் உள்ளது,” என்று கூறியுள்ளார்.
https://x.com/ANI/status/1795031536334704970

























