லண்டன்: 12வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த 2019 ஆம் ஆண்டு 2 மாதங்கள் நடந்தன. இதன் இறுதிப் போட்டியில் நியயூசிலாந்தை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனது இங்கிலாந்து. கிரிக்கெட்டின் தாயகமான. இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.
அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 2023-ம் ஆண்டு நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டிகள் முழுக்க முழுக்க இந்தியாவில் மட்டுமே நடக்கின்றன.
இதற்கு முன் மூன்று முறை இந்தியாவில் உலகக் கோப்பை போட்டித் தொடர் நடந்துள்ளது. 1987-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியை இந்தியா – பாகிஸ்தான் இணைந்து நடத்தின. 1996-ம் ஆண்டு நடந்த போட்டியை இந்தியா – இலங்கை – பாகிஸ்தான் நாடுகள் நடத்தின. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை இந்தியா – இலங்கை – வங்காள தேசம் ஆகியவை இணைந்து நடத்தின.
ஆனால் 13வது உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா மட்டுமே நடத்துகிறது. அனைத்துப் போட்டிகளும் இந்திய மைதானங்களில் மட்டுமே நடக்கும்.
இந்தப் போட்டியிலும் 10 நாடுகள் பங்கேற்க உள்ளன.
பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி மார்ச் 26 வரை போட்டிகள் நடக்கின்றன. ரவுண்ட் ராபின் மற்றும் ப்ளே ஆஃப் முறையில் இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்க உள்ளன.

























